pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியில் உங்கள் படைப்பை தற்பதிப்பு (Self Publish) செய்வது எப்படி?

21 ഫെബ്രുവരി 2017

1. முதலில் உங்கள் கணினியிலிருந்து tamil.pratilipi.com தளத்திற்கு சென்று கீழே குறிப்பிட்ட 'எழுதும்' பொத்தானை அழுத்தவும். அழுத்தினால் லாக் இன் பக்கம் வரும்.

 

2. நீங்கள் ஏற்கனவே உறுப்பினராக இருந்தால் உங்களது மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் கொடுத்து உள்நுழையவும். புதிய உறுப்பினரென்றால் கீழே குறிப்பிட்ட பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

 

3. லாக் இன் செய்த பின்னர் எழுத ஆரம்பிக்கலாம். லாக் இன் செய்த உடனேயே கீழே உள்ள பாப் அப் (pop-up) வரும். அதில் உங்களது படைப்பின் பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதி படைப்பின் வகையை குறிப்பிட்டுவிட்டு (கதை, கவிதை போன்றது) 'அடுத்து' என்ற பொத்தானை அழுத்தவும்.

 

4. பின்னர் வரும் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் படைப்பை காப்பி - பேஸ்ட் (Copy - Paste) செய்தோ, உங்களது தமிழ் தட்டச்சு மென்பொருள் வைத்தோ அல்லது எங்களது தளத்திலேயே வரும் ட்ரான்ஸ்லிட்ரேஷனை (Transliteration) உபயோகித்தோ படைப்பை தட்டச்சு செய்யலாம்.

 

5. படைப்பின் உள்ளே படம் சேர்ப்பது, லிங்க் சேர்ப்பது, எழுத்துக்களை போல்ட், இடாலிக்ஸ், அன்டர்லைன் செய்வது போன்ற வசதிகள் இருக்கின்றன. 

 

6. அனைத்தும் முடிந்தவுடன், கீழே குறிப்பிட்டுள்ள 'முடிக்க'  பொத்தானை அழுத்தவும்.

 

7. அழுத்தியவுடன் அந்த படைப்பை அதற்குரிய பிரிவில் சேர்பதற்கான pop - up வரும். படைப்பு எந்த வகைமையில் வருகிறதோ அதனை தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய வகைமை வேண்டுமென்றால் அதனை எழுதலாம். பின்னர், 'அடுத்து' பொத்தானை அழுத்தவும்.

8. அதை அழுத்தி படைப்பிற்கான முகப்பு படம், படைப்பை பற்றிய குறிப்பு ஆகியவற்றை சேர்த்து படைப்பை பதிப்பிக்கலாம். பதிப்பித்தால் மட்டுமே படைப்பு வாசகர் பார்வைக்கு வரும். இல்லையென்றால் அது உங்களுக்கு மட்டுமே தெரியும். 

 

இதுவே கணினியிலிருந்து பிரதிலிபியில் தற்பதிப்பு செய்யும் வழிமுறையாகும். கூடிய விரைவில் மொபைலில் எழுதும் வசதியை  கொண்டுவரவிருக்கிறோம். நன்றி.