சசி ரேவதி காதலித்து இரு வீட்டிலும் பெற்றோர் சம்மதிக்க திருமணம் செய்துகொண்டவர்கள். தினம் சிரிப்பும் சினிமாவும் ஹோட்டலும் என்று சுற்றித்திரிந்தவர்கள் கல்யாணம் ஆகி சிலவருடம் ஆன பின்பு இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் சண்டையும் சச்சரவும் சிடுசிடுப்பும் சூழ நொந்து நூடுல்ஸாகி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள்.
இவ்வாறிருக்கையில் ஒருநாள், சசியின் அலுவலகத்தில்
'என்ன சசி, சோகமா இருக்கீங்க ?' சசியின் அலுவலக நண்பர் வினவினார்.
'ஒங்களுக்கென்ன சார், நீங்க ஒரு யோகி ...'
'என்னாச்சி சொல்லுங்க?'
'ஒன்னுல்ல சார்'
'சம்சாரத்தோட சண்டையோ ?'
'எப்டி சார் கரிக்டா சொல்றீங்க?'
'நண்பா .. புதுசா கல்யாணமானவன் எப்பவுமே சந்தோசமாதான் இருப்பான் பட் அவன் சோகமாயிருந்தா ஊர்லேர்ந்து மாமனார் மாமியார் வந்திருக்கலாம், கல்யாணமாகி ஐந்து வருஷமானவன் சந்தோசமா இருந்தா ஊர்லேர்ந்து மச்சினி வந்திருக்கலாம், சோகமா இருந்தா வைஃப் கிட்ட சண்டை ... அவ்ளோதான் மேட்டரே'
'கல்யாணமாகி பத்து வருஷம் ஆனவன் சந்தோசமா இருந்தா ?'
'கல்யாணமாகி பத்து வருஷம் ஆகிருந்தா, அவன் எங்கேர்ந்து சந்தோசமா இருக்கறது ? அப்டியெல்லா யாரு இருக்கமாட்டாங்க நண்பா, வீணா மனசைப் போட்டுக் கொழப்பிக்காதீங்க'
'சார், கால் காட்டுங்க சார்'
'வாரி விடறதுக்கா ?'
'கும்புடுறதுக்கு சார்'
'வீட்டுல என்ன சண்டை?'
'சார் என்னோட மொபைலை நோண்டுறா சார், அன்லாக் பண்ணிக்குடுன்னு சண்டை போடுறா சார்'
'மொபைல்ல அப்டியென்ன சீக்ரட் வச்சிருக்கீங்க?'
'ஒங்களுக்கென்ன சார் ... நீங்க ஒண்டிக்கட்டை ... தாமரை மேல் தண்ணீர்னு வாழுறீங்க .... நம்மால முடியுதா ?'
'கையும் காலும் மூக்கும் கொண்டு ஆடவந்தக் காரணம் ... ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரணும் '
'ஆமா சார் ... ஆடுறே ... ஆடுறே ... அதுக்காக ?'
'போன் அன்லாக் பண்ணிக் குடுத்தீங்க ... அப்புறம் என்னாச்சி?'
'வேற வழி ... நேத்து அனிதாவுக்கு பெர்த்டே .. ஒங்களுக்கு தா தெரியுமே'
'நீங்க எக்ஸ்ட்ரா இன்வால்வ்மெண்ட் எடுத்து செலிபரேட் பண்ணுனீங்களே?'
'சார் ... நீங்களே என்ன மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே ... ராத்திரி பன்னெண்டு மணிக்கு அனிதாவுக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள் SMS அனுப்புனே, அத பாத்துட்டு கத்துறா சார் ... யார் அனிதா … எவ்ளோ நாளா பழக்கம் ... சரியான சைக்கோ சார்'
'அனிதாவா ?'
'சார் ... என்னோட பொண்டாட்டி சார் ... சரியான சைக்கோ சார் அவ'
'பொஸஸிவ்ன்ஸ் பா அது'
'பு.... கெட்ட வார்த்தை வருது வாயில.... சாரி சார்'
'இட்ஸ் ஓகே ... கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாத்தையு சமாளிக்கணு ... நாய் வேஷம் போட்டுட்டு குரைக்கமாட்டேன்னா எப்டிப்பா ?'
'நாய் வேஷம் தா .. அதுக்காக எப்பவுமே ஆட்டிக்கிட்டு இருக்கமுடியுமா ... வாலை; கடிச்சிக் கொதறிடுவே'
'அதுசரி எனக்கும்தான் போன மாசம் பிறந்தநாள் வந்துச்சி, அப்போ அதைக் கொண்டாடவோ SMS சோ அனுப்பலையேப்பா நீ'
'சார் ... நீங்க ஒரு யோகி சார் ... அதெல்லா கொண்டாடமாட்டீங்க '
'சரி விடு ... அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ ... எல்லாம் சரியாயிடும்'
'சார் ... நா ஆம்பளை சிங்கம் சார்'
'கல்யாணம் ஆயிடுச்சில்ல?'
'சோ ?'
'மியாவ் னு கத்த பழகிக்கோ'
'வீட்டுக்குப் போனாலே டென்சனா இருக்கு சார். சும்மா டீவி பாத்துக்கிட்டே இருக்கா சார்'
'நாம எப்படி ? வீட்டுக்குப் போனவுடனே செடிக்கு தண்ணி ஊத்தி, யோகா எக்ஸர்சைஸ் பண்ணி ... '
'சேச்சே'
'லாப்டாப் தொறந்து பேஸ்புக் யுட்யூப் னு உட்காருறீங்க, உங்களுக்கு வேண்டியதை நீங்க பார்க்கறீங்க, அவங்களுக்கு வேண்டியதை அவங்க பார்க்குறாங்க'
'அதுக்காக எப்பப்பாத்தாலும் கொன்னுடுவே, அழிச்சிடுவே, நாசமாப்போக இப்படியே பேசுறாங்க டீவில, அதை எதுக்கு உட்கார்ந்து பார்க்கணும் ன்னு தான் சார் கேட்குறே'
'டீவி இன்டர்நெட் கனெக்சன் கட் பண்ணிடுங்க'
'பிரெஸ்டிஜ் இஸ்யூ சார் ... வீட்டுல டீவி இல்லேன்னா எப்படி சார்'
'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை'
'கூழு சரியா கெடைக்கமாட்டேங்குது சார், உப்பு உரைப்பு இருக்கமாட்டேங்குது, வாய்ல வைக்கமுடியலே'
'அவங்களுக்கும் சேர்த்து நீங்க சமைங்க'
'வேற வழியில்லையா ?'
'தேவையில்லை ... எதிர்த்து போராடி என்ன சாதிக்கப்போகிறாய் ... அடிபணி ... அமைதியாய் இரு ... அலட்டல் தேவையில்லை'
'சார்'
'போகும்போது மல்லிப்பூ, பார்லே ஜி பிஸ்கட் வாங்கிட்டுப்போங்க'
'எல்லாரும் அல்வா வாங்கிட்டுப்போன்னு தானே சார் சொல்வாங்க, அதையும்விட பார்லே ஜி அவளுக்குப் புடிக்குமான்னு தெரியாது'
'நண்பா ... மல்லிப்பூ மனைவிக்கு, பார்லே ஜி ஒங்களுக்கு'
'சார்'
'தூக்கிப் போட சொல்லுங்க ... கீழ விழுவறதுக்கு முன்னால தாவி புடிங்க ... விளையாடுங்க ... நல்லாயிருங்க'
'சார் கணவன் சொல்றதை மனைவி கேட்கமாட்டாங்களா சார் ?'
'அனிதாவுக்கு SMS குடுக்குற கணவன் சொல்றதை மனைவி கேட்கமாட்டாங்க நண்பா'
'சார் நா ஜெனரலா கேக்குறே சார்'
'கணவன் சொல்றபேச்ச மனைவி கேட்கணும்னா நீங்க ஒரு 70 வருசத்துக்கு முன்னால பொறந்திருக்கனும், லாடம் கட்டுன குதிரை மாதிரி பணம் பொண்டாட்டி பசங்க ன்னு வாழப் பழகிக்கோங்க'
'சார் கல்யாணம் வரமா சாபமா சார்?'
'இக்கரைக்கு அக்கறை பச்சை நண்பா ... வீட்டுக்கு போனவுடனே ஒனக்கு காஃபி கிடைக்குதுல்ல, எனக்கு?'
'சார் நீங்க போகும்போதே ஒங்க இஷ்டத்துக்கு குடிச்சிட்டு போகலாம் சார் ... எனக்கு அப்டியா ... வாய்ல வைக்கமுடியாது'
'கைல கொண்டுவந்துத் தர்றாங்கள்ல, அந்த லவ் பாருப்பா'
'குடுக்கறத ... தட்டுல போடுறத ... கம்முன்னு வாங்கிக்கறோமே அங்க லவ் இல்லியா சார்'
'இருக்குன்னு புரிஞ்சதனாலதா பொஸசிவ் ஆகறாங்க'
'என்னவோ சார் ... ஒன்னும் புரியலே'
'எல்லாம் புரிஞ்சிட்டா நாம இந்த பூமில வாழ முடியாதுப்பா'
'சரி சார் வாழ்க்கையை கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கணும்னா ... என்ன பண்ணனும்?'
'வாழ் ... வாழ்ந்து கற்றுக்கொள் ... வாழ்க்கை ஒரு பாடம் … தினம் படி'
'வாழ்ந்து ? கத்துக்கிட்டு ? படிச்சி ?'
'செத்துப்போ'
'அப்போ காத்துக்கிட்டதெல்லா எதுக்கு?'
'நேற்றைக்கு, இன்னிக்கு கத்துக்கிட்டதை நாளைய பிரச்சனைக்கு யூஸ் பண்ணு ... நீயே சிக்கு ... நீயே வெளியே வா… என்னோட பாடம் உனக்குச் செல்லாது ... உன்னோடது எனக்கு ஆகாது'
'புரியலே பட் போதும் சார்'
'ஒரு சொற்பொழிவு ல கேட்டது - வாழ்க்கைங்கிறது ஒரு நூல் மாதிரி, ஒருபக்கம் நீங்க, ஒருபக்கம் உங்க மனைவி, சில சமயத்துல நீங்க இழுத்தா அவங்க விட்டுக்கொடுக்கணும், பல சமயத்துல அவங்க இழுக்கும்போது நீங்க விட்டுக்கொடுக்கணும், அப்படியில்லேன்னா '
'நூல் அருந்திடும் ... வாழ்க்கை முறிந்திடும்'
'அவ்வளவே சசி, வாழ்க வளமுடன்'
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு