நான் எப்படி ஒரு கதையை அல்லது கதையின் பாகத்தை பதிப்பிப்பது?

நீங்கள் ஒரு கதையின் பகுதியை எழுதி முடித்ததும், அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உங்கள் ப்ரொஃபைலில் பதிப்பிக்கலாம்! ஒரு கதைப் பகுதியை பதிப்பிப்பது அதை பொதுவில் ஆக்குகிறது, மேலும் உங்கள் கதை பற்றி வாசகர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களைப் பெற வழிசெய்கிறது.

 ஆண்ட்ராய்ட் செயலியில்:

 ஒரு நேரத்தில் ஒரு கதைப் பகுதியை வெளியிடுதல்:

1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுது பொத்தானை அழுத்தவும்.

2. கதைக்கு செல்லவும்.

3. புதிய பகுதியை எழுதுவதற்கு புதிய பாகம் சேர்க்க என்பதை அழுத்தவும் அல்லது வரைவில் ஏற்கனவே உள்ள பகுதியை அழுத்தவும்.

4. பதிப்பிக்க என்பதை அழுத்தவும்.

ஒரே நேரத்தில் பல பாகங்கள்:

ஒரே நேரத்தில் பல பாகங்களை வெளியிடும் அம்சம் தற்போது ஆண்ட்ராய்ட் செயலியில் இல்லை.

உங்கள் கதையின் பாகங்கள் இப்போது உங்கள் ப்ரொஃபைலில் தெரியும். உங்கள் கதையில் உள்ள எந்த வரைவையும் வாசகர்களால் பார்க்க முடியாது.

இணைய தளத்தில்:

1. மேலே உள்ள மெனுவில் எழுத என்பதைக் கிளிக் செய்யவும்

2. படைப்பைச் சேர்க்க என்பதை அழுத்தவும்.

3. பின் வரும் திரையில் உங்கள் கதையைச் சேர்க்கவும்

4. பதிப்பிக்க பொத்தானைக் கிளிக் செய்யவும்

5. பட்டியலில் காட்டப்படும் தொடர்களில் இந்த பாகத்தை சேர்க்க வேண்டிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

6. கதை வகையைத் தேர்ந்தெடுத்து தலைப்பைச் சேர்க்கவும்.

7. பதிப்புரிமை மற்றும் சேவை விதிமுறைகளை ஏற்கவும்.

8. பதிப்பிக்க பொத்தானை அழுத்தவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?