தனியுரிமை

பதிப்பிக்கப்படும் படைப்புகள்/ உள்ளீடுகளில் எந்தவொரு நபரின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி வெளிப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக:

 

1. ஒரு தனிநபரின் அனுமதியின்றி, அவரை அடையாளம் காட்டக்கூடிய தகவலை வெளியிட வேண்டாம்.

2. பொது நபர்களைப் பற்றி இடும் தகவல்கள் வெளிப்படையாக கிடைக்கின்ற அல்லது சட்டப்பூர்வமாக பெறப்பட்ட தகவல்களுக்குள் அடங்க வேண்டும்.

3. முன் அனுமதியின்றி எவருடைய தனிப்பட்ட தகவல்கள், தரவுகளை வெளியிட வேண்டாம். தனிப்பட்ட தகவல் அல்லது தரவு, புகைப்படங்கள், மின்னஞ்சல், அரட்டைச் செய்திகள் அல்லது வேறு எந்த வடிவத்திலும் பெறப்பட்ட தனிப்பட்ட செய்திகள், குடியிருப்பு முகவரி, வங்கி கணக்கு விவரங்கள், பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், அரசாங்கம் வழங்கிய அடையாளம் அல்லது பிற ஆவணங்கள். மற்றும்  இணைய ஐ.பி முகவரி அல்லது பொதுவெளியில் அறியப்படாத தகவல்கள்.

4. ஹேக்கிங் உட்பட சட்டத்துக்கு புறம்பான வழியில் பெறப்பட்ட எந்தவொரு நபரின்  தகவல்ளையும் வெளியிட வேண்டாம்.

5. ஒருவரின் ஆஃப்லைன் அடையாளத்தை வெளிப்படுத்தும் அல்லது ஒரு நபரின் ஆஃப்லைன் அடையாளத்தை அவர்களின் ஆன்லைன் அடையாளத்துடன் இணைக்கும் (டாக்ஸிங்) செயல்பாடுகளை புரிய வேண்டாம் மற்றும் அதற்கு  வழிவகுக்கும் எந்தத் தகவலையும் வெளியிட வேண்டாம்.

6.தனிநபர்களின் தனியுரிமையை மீறுவதற்கான அறிவுறுத்தல்கள், ஊக்கம், தூண்டுதல் வழங்குதல் அல்லது தனிநபர்,தனிக் குழுவின் தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கும் தகவல்களை எதையும் வெளியிடக்கூடாது. எங்கள் சேவைகள் மற்றும் அம்சங்களை அதற்காகப் பயன்படுத்தக் கூடாது.

7. கார்ப்பரேட், வர்த்தக ரகசியங்கள், தொழில்நுட்பத் தரவு அல்லது அறிவுறுத்தல் கையேடுகள் போன்ற எந்தவொரு நிதித் தகவல்களையும் உள்ளடக்கிய, ஆனால் அவை மட்டுமின்றி, கார்ப்பரேட்டின் ரகசிய அல்லது  எந்த தனியுரிமைத் தகவலையும் வெளியிட வேண்டாம். 

8. நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தையும் மீறும் எவரையும் பற்றிய எந்தத் தகவலையும் பதிவிட வேண்டாம்.

 

புகைப்படங்களுக்கு எதிராக ஒருவரிடமிருந்து ஏதேனும் புகாரைப் பெற்றால் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்:

 

1. எந்தவொரு தனிப்பட்ட நபரின் அந்தரங்க உறுப்புகளை வெளிப்படுத்துபவை

2. எந்தவொரு தனிநபரையும் முழு அல்லது பகுதி நிர்வாணமாகக் காட்டுவது, எந்தவொரு நபரையும் பாலியல் செயலிலும் ஈடுபடுவதுபோல் காட்டுவது அல்லது சித்தரிப்பது.

3. மார்ஃபிங் செய்வது உட்பட எந்தவொரு நபரின் செயற்கையாக உருமாற்றம் செய்யப்பட்டப் படங்கள்.  

 

கூடுதலாக, ஒரு பயனர் தனது ப்ரொஃபைலை முடக்கும்படி நிறுவனத்தைக் கோரலாம் மற்றும் நிறுவனம் அதைச் செய்யும். முடக்கிய பின் பயனர் பதிப்பித்த படைப்புகள்/உள்ளீடுகள், இணையதளம்/செயலியில் மற்ற பயனர்களுக்குக் காட்டப்படாது. இருப்பினும், பயனர் மீண்டும் இணையதளம்/செயலியில் உள்நுழைந்தால், வெளியிடப்பட்டப் படைப்புகள்/உள்ளீடுகள் மீண்டும் தெரியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?