மின்னஞ்சல் முகவரி கொண்டு உங்கள் பிரதிலிபி கணக்கில் லாக் இன் செய்வதில் சிக்கல் உள்ளதா? உங்கள் மின்னஞ்சலுடன் ஏற்கனவே ஒரு கணக்கு இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறதா? அல்லது லாக் இன் செய்த பிறகு உங்கள் கதைகள், ஃபாலோவர்கள் போன்றவற்றை உங்களால் பார்க்க முடியவில்லையா?
உங்கள் தற்போதைய கணக்கில் லாக் இன் செய்வதற்குப் பதிலாக, நீங்கள் தற்செயலாக ஒரு புதிய பிரதிலிபி கணக்கை உருவாக்கியிருக்கலாம்.
முதன்முதலில் லாக் இன் செய்யும் போது நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உங்கள் பிரதிலிபி கணக்கில் லாக் இன் செய்ய முயற்சிக்கவும்.
மேலும் ஏதேனும் சிக்கல்கள், சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் லாக் இன் செய்யும் மின்னஞ்சல் முகவரியில் இருந்தே எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த மின்னஞ்சலில் இருந்து லாக் இன் செய்துள்ளீர்கள் என்பது மறந்துவிட்டதெனில், தயவுசெய்து உங்கள் பிரதிலிபி கணக்கின் சுட்டியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் பார்த்துச் சொல்கிறோம்.