பதிப்பிக்கப்பட்ட ஒரு பாகத்தை நான் வரைவுகளுக்கு அனுப்பலாமா?

நீங்கள் ஒரு கதைப் பகுதியை தவறுதலாக வெளியிட்டிருந்தாலோ அல்லது உங்கள் வாசகர்கள் அதை வாசிக்கக் கூடாது என்று நீங்கள் எண்ணினாலோ நீங்கள் அதை நீக்க வேண்டியதில்லை - நீங்கள் அந்தப் பகுதியை பதிப்பித்தலிலிருந்து மட்டும் விலக்கலாம். இது ஒரு கதைப் பகுதியை மீண்டும் வரைவுக்கு மாற்றியமைக்கும், மேலும் அதற்குரிய பார்வைகள், விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் அந்தப் பகுதியிலேயே வைத்திருப்பீர்கள்.

 

ஒரு பகுதியை வரைவுக்கு மாற்றியமைப்பதில் உள்ள நல்ல் விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் பார்க்காதபடி நீங்கள் அதை உங்களுடன் வைத்திருக்க முடியும்; மாறாக நீங்கள் ஒரு பகுதியை நீக்கிவிட்டால், அதை மீட்டெடுக்க முடியாது - அது நிரந்தரமாக அழிந்துவிடும். 

 

ஆண்ட்ராய்ட் செயலியிலிருந்து:

 

ஒரு கதைப் பகுதியை பதிப்பித்தலிலிருந்து விலக்க

 

1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுதுக பொத்தானை அழுத்தவும்.

2. கதைக்கு செல்லவும்.

3. கதைப் பகுதிக்கு அருகில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

4. வரைவுக்கு அனுப்ப என்பதை அழுத்தவும்.

5. உறுதிப்படுத்துக

 

ஒரு கதையை பதிப்பித்தலிலிருந்து விலக்க:

 

1. செயலியின் முகப்பிலிருந்து வலதுபுறமாக மேலே இருக்கும் ப்ரொஃபைல் ஐகானை க்ளிக் செய்து ப்ரொஃலுக்குச் செல்லுவும்.

2. கதைக்கு செல்லவும்.

3. கதை அருகில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

4. வரைவுக்கு அனுப்ப என்பதை அழுத்தவும்.

5. உறுதிப்படுத்துக

 

இணையதளத்தில்:

 

1. மேலே உள்ள மெனுவிலிருந்து ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும்.

2. கதையைத் தேர்ந்தெடுக்கவும்.

3. வரைவுக்கு அனுப்ப என்பதை அழுத்தவும்.

4. உறுதிப்படுத்துக

 

இந்தப் பதிவு உதவியதா?