பிரதிலிபியில் ஒரு படைப்பை எப்படி எழுதுவது?

பிரதிலிபியில் உங்கள் ப்ரொபைலை தொடங்கியபின், உங்களால் படைப்புகள் பதிப்பிக்க இயலும். பிரதிலிபியில் படைப்பு எழுதுவது மிக எளிதான செயல். நீங்கள் ஒரு கதையை உருவாக்கி, அதில் ஒவ்வொரு பாகமாக சேர்த்து, முகப்பு படம் இணைத்து, வாசகர்கள் வாசிக்க ஏதுவாக கதைக்கு ஏற்ற பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 

பிரதிலிபி எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை பதிப்பிக்க நிறைய முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதனை மனதில் வைத்து இங்கே சில வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறோம் :

  1. உங்கள் படைப்பு எங்களது படைப்பு சார்ந்த விதிமுறைகளை பின்பற்றி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

  2. பிரதிலிபியில் இருந்து உங்களது படைப்புகளை நகல் எடுத்து (back up) வைத்துக் கொள்ளவும். இது உங்கள் படைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும்.

  3. படைப்பின் உள்ளே நீங்கள் சேர்க்கும் படங்கள் எங்களது படைப்பு சார்ந்த விதிமுறைகளை பின்பற்றி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்களது வரைவுகளில் இருக்கும் படங்கள் உட்பட, நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு படமும் எங்களது புகைப்பட சோதனை நடைமுறைக்கு உள்ளாகும்.

  4. உங்களது மின்னஞ்சல் முகவரி சரிபார்க்கப்பட்டு, புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்: பிரதிலிபியில் சேர்க்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்களால் அக்சஸ் (access) செய்ய முடியவில்லையெனில், உங்களது வரைவுகள் உட்பட உங்கள் படைப்புகள் தொலைந்துபோக வாய்ப்பதிகம்.

உங்களது படைப்பை பிரதிலிபியில் பதிப்பித்துவிட்டால், பின் அதனை நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்! பிரதிலிபிக்கு உள்ளேயும்   வெளியேயும் உங்கள் கதையை விளம்பரப்படுத்த பல வழிகள் உள்ளன. 

உங்கள் கதையை விளம்பரப்படுத்துதல் என்ற எங்கள் கட்டுரையில் அந்த உதவிக்குறிப்புகளில் சிலவற்றை நீங்கள் காணலாம், மேலும் எங்கள் அதிகாரப்பூர்வ பிரதிலிபி கணக்கில் இதுகுறித்த படைப்பை நீங்கள் காணலாம்.

பிரதிலிபியில் உங்கள் படைப்பில் வாசகர்கள் எவ்வளவு ஈடுபாடு கொள்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க பல வழிகள் உள்ளன. உங்கள் வாசிப்பு எண்ணிக்கை, ரேட்டிங் மற்றும் ஒவ்வொரு கதை பகுதியிலும் அல்லது ஒட்டுமொத்த கதையிலும் விமர்சனங்களின் எண்ணிக்கையையும் நீங்கள் சரிபார்க்கலாம். உங்கள் 'படைப்பு விவரம்' பகுதியை பார்ப்பதன் மூலம், உங்கள் மொத்த வாசகர் விவரங்கள் மற்றும் உங்களின் எந்த படைப்பு அதிகம் வாசிக்கப்பட்டிருக்கிறது போன்றவற்றை காணலாம்.

சிறந்த எழுத்தாளர்கள் நிச்சயம் நிறைய வாசகர்களை பெறுவார்கள். நீங்கள் உங்கள் படைப்புகளை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் அதேவேளையில், பிற எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசித்து உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?