இணைய தொடர்பு இல்லாமலேயே என்னால் பிரதிலிபி கதைகளைப் படிக்க முடியுமா?

ஆஃப்லைன் வாசிப்பு வசதி மூலம் உங்களுக்குப் பிடித்தமான கதைகளை இணைய தொடர்பு இல்லாமலேயே படிக்க முடியும். ஒருமுறை மட்டும் இணைய தொடர்பை பயன்படுத்தி, உங்களுக்குப் பிடித்த கதையை உங்கள் ஆஃப்லைன் பட்டியலில் சேர்த்துக்கொண்டால் போதும்; பிறகு இணையம் இல்லாமலேயே வாசித்து மகிழலாம்.

ஆஃப்லைன் நூலகம்  உங்களுக்கு வழங்கும் வசதிகள்:

  • ஆஃப்லைனில் படிக்க வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சேமிக்கலாம்.
  • உங்கள் ஆஃப்லைன் பட்டியலிலிருந்து நேரடியாகக் கதைகளைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.

உங்கள் ஆஃப்லைன் பட்டியலில் கதையைச் சேர்க்க அல்லது நீக்க:

  • கதையைச் சேர்க்க: நீங்கள் ஆஃப்லைனில் அதாவது இணைய வசதி இல்லாமல் வாசிக்க விரும்பும் கதையைத் திறந்து, கதையின் விவரப் பக்கத்தில் உள்ள 'டவுன்லோட்' பொத்தானைக் கிளிக் செய்யவும். ப்ரீமியம் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பிரீமியம் கதைகளை டவுன்லோட் செய்ய முடியும் என்பதையும், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 2 ப்ரீமியம் கதைகளை மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
  • கதையை நூலகத்திலிருந்து நீக்க, உங்கள் நூலகத்திற்கு சென்று, நீங்கள் நீக்க விரும்பும் கதைக்கு அருகில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டு, அதில் ‘நீக்கு’ என்று இருப்பதை தேர்ந்தெடுத்து, பிறகு 'ஆம்’' என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்தப் பதிவு உதவியதா?