பிரதிலிபிக்கு உள்ளே இருக்கும் என்னுடைய தனிப்பட்ட விவரங்களை நான் எவ்வாறு பாதுகாப்பது?

இணையப் பாதுகாப்பு என்பது முதன்மையானது மற்றும் ஒவ்வொருவரும் பிரதிலிபியைப் பயன்படுத்தும் போதெல்லாம் பாதுகாப்பாகவும் உணர வேண்டும். இணையத்தில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்களுக்கு தனியுரிமை முக்கியமானது, மேலும் எந்தவொரு பிரதிலிபி பயனரும் தங்கள் அடையாளத்தை/சுய விவரங்களை வெளிப்படுத்த வற்புறுத்தப்பட மாட்டார்கள். உங்கள் படைப்புகளிலோ சுய விவரப் பகுதியிலோ உங்கள் சொந்த/தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்ய வேண்டாம்.

 

உங்கள் ஆதார் எண் போன்ற ரகசியமான அல்லது முக்கியமான தகவல்களை பிரதிலிபி அதன் பயனர்களிடம் ஒருபோதும் கேட்காது, மேலும் இதுபோன்ற தகவல்களைக் கேட்டு பிரதிலிபியோ அல்லது வேறு எந்த தளமோ  தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பாது. பிரதிலிபி இணையதளம் அல்லது செயலிக்கு வெளியேயும் கூட பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதிலிபி ஒருபோதும் கோராது என்பதை நினைவில் கொள்ளவும். பிரதிலிபியில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் போட்டிகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப்படலாம், மேலும் பயனர்களுக்கு அத்தகைய சேவை அல்லது பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் எனும் போது மட்டுமே.

 

இது போன்ற தகவல்களைக் கோரும் பிரதிலிபியுடன் தொடர்புடையதாகக் கூறும் இணையதளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். இந்த தளங்கள் அல்லது செயலிகள் எந்த வகையிலும் பிரதிலிபியுடன் இணைக்கப்படவில்லை. சந்தேகம் இருந்தால், எப்போதும் எங்கள் குழுவை நேரடியாக அணுகவும்.

 

மேலும் சில குறிப்புகள்:

 

  1. தனிப்பட்ட விவரங்களைக் கோரும் எந்த பிரதிலிபி பயனரும் உங்களைத் தொடர்புகொள்வதைத் தடுக்க பிளாக் ஆப்ஷனை பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, ஒரு பயனரை எவ்வாறு பிளாக் செய்வது என்பது குறித்த எங்கள் வழிகாட்டியைப் பார்க்கவும்.

 

  1. உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை ஒருபோதும் யாருக்கும் கொடுக்க வேண்டாம். உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மற்றவர் அறிந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சப்போர்ட் குழுவைத் தொடர்பு கொள்ளவும். தயவு செய்து முடிந்தவரை சிக்கலை விரிவாக விளக்கவும். எங்கள் உதவிக்குழு உங்கள் பிரச்சனையை விரிவாக ஆராய்ந்து நேரடியாக உங்களுக்கு உதவுவார்கள்.

 

  1. உங்கள் அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தகவலை யாராவது வெளியிட்டால், அதை அகற்றுவதற்கு அவர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், பயனரை ரிப்போர்ட் செய்யவும், மேலும் கதையின் எந்த பகுதியில் உங்களைப் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்கள் என்பதற்கான நேரடி சுட்டியை அந்த மின்னஞ்சலில் குறிப்பிடவும்.

 

தனிப்பட்ட தகவலின் எடுத்துக்காட்டுகள்: தொலைபேசி எண், முகவரி/இடம், புகைப்படம் மற்றும் பிற தனிப்பட்ட அடையாளங்கள்.

 

கதைகளின் கற்பனைத் தன்மை மற்றும் உண்மையான பெயர்கள் தற்செயலாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காரணமாக, நிஜத்தில் இருக்கும் ஒருவரின் பெயர் அல்லது அதைப் போன்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட படைப்பை எங்களால் அகற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், கதைகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுகின்றன, சில சமயங்களில் அவை நிஜ வாழ்க்கையில் நடந்த சூழ்நிலைகளைக் கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, உண்மையான நிகழ்வுகளைப் போன்ற காட்சிகளைக் கொண்ட கதையை எங்களால் அகற்ற முடியாது.

 

இந்தப் பதிவு உதவியதா?