இந்தக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் Nasadiya Technologies Pvt Ltdஇன் (“கம்பெனி”/ “நாங்கள்”/ “எங்கள்”) 'பிரதிலிபி' இணையதளம் (www.pratilipi.com), ("இணையதளம்") மற்றும் Android மற்றும் iOSஇல் ("செயலி") கிடைக்கும் 'பிரதிலிபி' செயலிக்குப் பொருந்தும். எந்த நபர் வழியாகவும் ("பயனர்"/"நீங்கள்"/"உங்கள்").
நிறுவனம், இணையதளம்/செயலி மூலம் பின்வருவனவற்றை உள்ளடக்கிய சேவைகளை வழங்குகிறது:
அ. நிறுவனம் முதன்மையாக ஒரு பயனருக்கு உதவுகிறது:
- இணையதளம்/செயலி வெவ்வேறு மொழிகளில்,
இலக்கியப் படைப்புகள் / ஆடியோ படைப்புகள் / கிராஃபிக் நாவல் படைப்புகள் அல்லது படைப்புகளை (புத்தகங்கள், கவிதைகள், கட்டுரைகள், சித்திரக்கதைகள் போன்றவை, அவற்றில் அடங்கும் முகப்புப் படங்கள்/ புகைப்படங்கள் உட்பட ) பதிப்பித்து வெளியிடவும் (“பதிப்பிக்கப்படும் படைப்புகள்”)
- இணையதளம்/செயலியில், பதிப்பிக்கப்படும் படைப்புகளை , நிறுவனத்தாலயே வெளியிடப்படும் (“நிறுவன உள்ளடக்கம்” என குறிப்பிடப்படும்) படைப்புகளை பயன்படுத்த.
வெளியிடப்பட்டும் படைப்புகள் மற்றும் நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றாக "படைப்புகள்" என்று குறிப்பிடப்படும்.
ஆ. இணையதளம்/செயலியைப் பயன்படுத்தும் போது பயனரின் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் துணை அம்சங்களை (“அம்சங்கள்”) வழங்கலாம் ஆனால் அவை (i) உள்ளடக்கத்தில் விமர்சனங்களை சமர்ப்பித்தல், (ii) பிற பயனர்களுடன் தொடர்புகொள்வதற்கான சாட் அம்சம், (iii) பயனர் பெயர், ப்ரொஃபைல் படத்தை அமைத்தல் மற்றும் பயனரின் ப்ரொஃபைலில் பிற விவரங்களை உள்ளிடுதல் மட்டுமே அல்ல. துணை அம்சங்களைப் பயன்படுத்தும் போது பயனரால் பதிவேற்றப்படும் அனைத்துப் பொருட்களும் ("உள்ளீடுகள்") எனக் குறிப்பிடப்படும்.
இங்கு பயன்படுத்தப்படும் ஆனால் வரையறுக்கப்படாத எந்தவொரு சொல்லும் Terms of Use இல் கொடுக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.
எங்கள் பயனர்களின் வசதிக்காக இந்த வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் நாங்கள் பிற மொழிகளில் கிடைக்கச் செய்யலாம். எவ்வாறாயினும், ஏதேனும் முரண்பாடு அல்லது புரிதலில் வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கிலப் பதிப்பு செல்லுபடியாகும்.