உங்கள் பிரதிலிபி கணக்கின் எந்தப் பகுதிகள் மற்ற பயனர்களுக்குத் தெரியும், எந்தப் பகுதிகளை உங்களால் மட்டுமே பார்க்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அது தனிப்பட்டதா அல்லது பொதுவானதா என்பதைத் தெரிந்துகொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
சுயவிவரம்:
உங்கள் சுயவிவரத்தில் உங்களைப் பற்றிய பல தகவல்களை சேமிக்க முடியும்.
உங்கள் ப்ரொஃபைல் புகைப்படம், பெயர் மற்றும் புனைப்பெயர் அனைத்தும் இயல்பாகவே பொதுவில் இருக்கும். உங்கள் சுயவிவரத்தில் சேர்க்கப்பட்டுள்ள உங்களைப் பற்றிய விவரங்களும் பொதுவானவை.
உங்கள் சுயவிவரத்தில் சேர்க்கும் பிறந்த தேதி இயல்பாகவே தனிப்பட்டதாக இருக்கும்.
நூலகம்:
உங்கள் நூலகத்தில் உள்ள படைப்புகள் தனிப்பட்டவை. இருப்பினும், உங்கள் நூலகத்தில் உள்ள கதைகள் உங்கள் முகப்புப் பக்கத்தில் பரிந்துரைகள் வடிவில் தோன்றும்.
உங்களுக்கான பரிந்துரைகளில் இருந்து கதைகளை நிராகரிக்கவோ நீக்கவோ முடியாது.
கலெக்சன்:
உங்கள் கலெக்சனில் உள்ள படைப்புகள் அனைத்தும் பொதுவில் இருக்கும். அவற்றை தனிப்பட்டதாக மாற்ற முடியாது.
அவை பரிந்துரைகள் வடிவில் தோன்றலாம். மேலும், உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திலும் காட்டப்படும்.
கதைகள்:
நீங்கள் பதிப்பித்த கதைகள் இயல்பாகவே பொதுவில் இருக்கும். அவற்றைத் தனிப்பட்டதாக மாற்ற முடியாது.
இருப்பினும்,வரைவுகளில் இருக்கும் கதைகள் தனிப்பட்டவை.
தேடல்:
உங்கள் தேடல் முடிவுகள் உங்கள் கணக்கில் தனிப்பட்டவையாக இருக்கும். நீங்கள் தேடல் முடிவை ஒவ்வொன்றாக நீக்கலாம், ஆனால் உங்கள் முழு தேடல் வரலாற்றையும் ஒரே நேரத்தில் அழிக்க இயலாது.
ஆண்ட்ராய்டில்: தேடல் முடிவை நீக்க, அதற்கு அடுத்துள்ள 'x' ஐ அழுத்தவும்.
iOS இல்:
'பரிந்துரைக்கப்பட்ட தேடல்களை' உங்களால் அழிக்க முடியாது.