தினசரி தொடர் பகுதி தொடர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது. பிரத்யேக முகப்புப் பக்க விட்ஜெட் வரவிருக்கும் ஏழு நாட்களுக்கு தொடர்களின் முன்பதிவேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும்.
தினசரி தொடர் விட்ஜெட்டில் எந்தத் தொடரேனும் இடம்பெற வேண்டுமானால், வாரத்தின் வரவிருக்கும் நாட்களில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது முன்பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முன்பதிவேற்ற வசதி ஆண்ட்ராய்ட் செயலியில் மட்டுமே கிடைக்கும்.
எப்படி முன்பதிவேற்றம் செய்வது?
முன்பதிவேற்ற வசதி தொடர்கதைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஒரு தொடரை முன்பதிவேற்றம் செய்ய, குறைந்தபட்சம் ஒரு தொடர் பகுதியையாவது வரைவாக வைத்திருக்க வேண்டும்.
1. செயலியில் கீழே தரப்பட்டுள்ள ‘எழுதுக’ பொத்தானைக் கிளிக் செய்யவும்
2. கதைக்கு செல்லவும்
3. புதிய பாகம் சேர்க்க என்பதை க்ளிக் செய்யவும்.
4. உங்கள் புதிய பகுதியை எழுதி முடித்த பிறகு, சேமி பொத்தானை அழுத்தவும்.
5. தொடர்கதை வரைவுகளில் சேமிக்கப்பட்ட புதிய பகுதிக்கு அடுத்துள்ள ‘முன்பதிவேற்றம் செய்ய’ பொத்தானை அழுத்தவும்.
6. முன்பதிவேற்றம் செய்யவேண்டிய நேரத்தையும் தேதியையும் தேர்ந்தெடுக்கவும்
7. முன்பதிவேற்று என்பதை க்ளிக் செய்யவும்.
குறிப்பு:
1. முன்னர் தீர்மானிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை நீங்கள் மாற்ற விரும்பினால், அதன்படி முன்பதிவேற்ற தேதி மற்றும் நேரத்தை எப்போதும் புதுப்பிக்கலாம்.
2. முன்பதிவேற்றம் செய்யப்பட்ட பகுதியின் எந்தத் திருத்தங்களும் பகுதியை வெளியிட திட்டமிட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்யப்பட வேண்டும்.
தொடரின் பகுதியை முன்பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சிரமங்களை நீங்கள் எதிர்கொண்டால், எங்களை அணுகவும். நாங்கள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்வோம்.