படைப்பை ரிப்போர்ட் செய்தல்

ஒரு படைப்பை உருவாக்கச் செலுத்தப்படும் அளவுகடந்த ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் மதிக்கிறோம், எனவே தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எழுத்தாளர்களுக்கு உதவுவது எங்களது முன்னுரிமையாகும்.

 

எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் படைப்பு வழிகாட்டுதல்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பிறரின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அவர்களின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பதிப்பிப்பது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

எங்களின் கொள்கையானது, பதிப்புரிமை மீறப்பட்டதாகக் கூறப்படும் படைப்பை விரைவாக அகற்றுவது அல்லது முடக்குவதன் மூலம் நாங்கள் பெறும் பதிப்புரிமை மீறல் குறித்த சரியான புகார்களுக்கு பதிலளிப்பதாகும்.

 

மீண்டும் மீண்டும் மீறுபவர்கள் - மேலே உள்ள கொள்கையில் கூடுதலாக, மீண்டும் மீண்டும் மற்றவர்களின் பதிப்புரிமைகளில் மீறுவதாகக் குற்றம் சாட்டப்படும் பயனர்களின் கணக்குகளை நாங்கள் முடக்கலாம்.

 

குறிப்பு: பதிப்புரிமை ஒரு யோசனையின் வெளிப்பாட்டை மட்டுமே பாதுகாக்கிறது, மாறாக யோசனையையே அல்ல. எனவே ஒரே மாதிரியான கதைகள் அல்லது கதை கருப்பொருள்கள் பதிப்புரிமை மீறலாக இருக்காது. ஒரு படைப்பு உங்கள் பதிப்புரிமையை மீறுகிறதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் முன் தொழில்முறை/சட்ட ஆலோசனையைப் பெறுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.

 

ஆன்ட்ராய்டில் எவ்வாறு புகாரளிப்பது:

 

1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் கதையின் கதைச்சுருக்கப் பக்கத்தைப் பார்வையிடவும்.

2. திரையின் மேல் வலது மூலையில் உள்ள கேள்விக்குறி ஐகானை அழுத்தவும்

3. கதையைப் புகாரளிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.தொடர்ந்து புகார் அறிக்கைக்கான கூடுதல் விவரங்களைத் வழங்கவும்.

4. 'சமர்ப்பிக்க' என்பதை அழுத்தவும். புகார் அறிக்கை பிரதிலிபி சேவைக் குழுவைச் சென்றடைந்து, அங்கு அது மதிப்பாய்வு செய்யப்படும்.

 

நான் ஒரு கதையைப் புகாரளித்தால் என்ன நடக்கும்?

 

தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன், புகாரளிக்கப்பட்ட அனைத்துக் கதைகளும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. சில சமயங்களில் விதிமுறை மீறலை உறுதிசெய்த பிறகு சரியான நடவடிக்கை எடுக்க கூடுதல் தகவல்களைக் கோருவோம். ஒரு கதை பிரதிலிபியின் படைப்பு வழிகாட்டுதல்கள் அல்லது சேவை விதிமுறைகளை மீறினால், அது அகற்றப்படும்.

 

இந்தப் பதிவு உதவியதா?