எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் பிரதிலிபி கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் டீஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ஒரு பிரதிலிபி கணக்கு டீஆக்டிவேட் செய்த பின், அந்த கணக்கின் சுயவிவரத்தையோ படைப்புகளையோ எந்தவொரு பிரதிலிபி பயனராலும் பார்க்க முடியாது. அந்த ப்ரொஃபைலை யாராவது தேடும் போது, மற்ற பயனர்களுக்கு அந்த கணக்கு தென்படாது. அந்த பயனர் பதிப்பித்த அனைத்து படைப்புகளும் வரைவுகளுக்கு சென்றுவிடும்.
மீண்டும் லாக் இன் செய்வதன் மூலம் அந்த கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும். பின்னர், வரைவுகளில் இருக்கும் படைப்புகளை ஒவ்வொன்றாக அந்த பயனர் தன் பக்கத்தில் பதிப்பிக்க வேண்டும்.
டீஆக்டிவேட் செய்யப்பட்ட காலத்தில், உங்கள் படைப்புகள் எதுவும் வாசகர்களுக்குக் காட்டப்படாது, எனவே அவர்கள் ஸ்டிக்கர்களையோ சப்ஸ்கிரிப்சன் வசதியை பயன்படுத்தியோ உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது. அந்த கணக்கு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்ட பின், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை மீண்டும் வழங்கப்படும்.