பிரதிலிபி நாணயங்கள் வைத்து என்ன செய்ய முடியும்?

நாணயங்கள் கொண்டு ஒருவர் பிரதிலிபியில் தனக்கு பிடித்த எழுத்தாளருக்கு அல்லது படைப்புக்கு ஸ்டிக்கர்ஸ் வழங்கி ஆதரிக்க முடியும். உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை தேர்ந்தெடுத்து நீங்கள் படைப்புக்கோ எழுத்தாளருக்கோ வழங்கலாம். குறிப்பிட்ட ஸ்டிக்கரின் நாணய மதிப்பு, எழுத்தாளரின் கணக்கிற்கு சென்று அது அவருக்கு பண வெகுமதிகளைப் பெற உதவும்.

ஒரு படைப்புக்கு ஸ்டிக்கர்ஸ் வழங்க, படைப்பு பக்கத்திற்கு சென்று 'இந்த படைப்பை ஊக்குவிக்க' பொத்தானை க்ளிக் செய்து ஊக்குவிக்க முடியும். அதேபோல் எழுத்தாளருக்கு ஸ்டிக்கர்ஸ் வழங்க, ப்ரொபைல் பக்கத்திற்கு சென்று 'இந்த எழுத்தாளரை ஊக்குவிக்கவும்' பொத்தானை க்ளிக் செய்து ஊக்குவிக்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் போதுமான நாணயங்கள் இல்லையெனில்:

  • 'எனது நாணயங்கள்' பகுதியிலிருந்து நாணயங்கள் வாங்கிக் கொள்ள முடியும். 'எனது நாணயங்கள்' பகுதிக்கு செல்ல முகப்பு பக்கத்தில் வலதுபக்கம் மேலே இருக்கும் நாணயங்கள் ஐகானை க்ளிக் செய்யவும்.

அல்லது

  • பிரதிலிபி ஆண்ட்ராய்ட் செயலியில் தினமும் தவறாமல் படைப்புகள் வாசித்து, 'வாசிப்பு சவாலில்' வென்று வெகுமதியாக நாணயங்கள் பெறுங்கள்.

இந்தப் பதிவு உதவியதா?