வாசகர் வழிகாட்டுதல்கள்

பதிப்பிக்கப்படும் படைப்புகளைப் படிக்கும் எங்கள் வாசகர்கள் அனைவரும் பின்வரும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:

 

1. எழுத்தாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டாலன்றி பதிப்பிக்கப்பட்ட படைப்புகளை நகலெடுக்கவோ அல்லது அசல் படைப்புகளில் மற்றொரு நபரின் பதிப்புரிமைகளை மீறவோ அல்லது எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும், அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்.

 

2. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரொஃபைலை உருவாக்க வேண்டாம். எந்த காரணத்திற்காகவும் ஒரு ப்ரொஃபைல் இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ மற்றொரு சுயவிவரத்தின் மூலம் உள்நுழைய வேண்டாம்.

 

3. தவறான தகவலைப் பயன்படுத்தி போலியான ப்ரொஃபைலை  உருவாக்காதீர்கள் அல்லது எங்கள் தளத்தில் உள்ள மற்றொரு நபரின் பெயர், புகைப்படம், ஆகியவற்றைப் பயன்படுத்தி நீங்கள் நீங்கள் அல்லாத நபர் என்று கூறிக்கொண்டு அல்லது வேறு எந்த வழியிலும் ஆள்மாறாட்டம் செய்யாதீர்கள்.

 

4. பிற பயனர்களிடம் தகவல்தொடர்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க இணையதளம்/செயலியில் அம்சங்களைப் பயன்படுத்தும்போதும், உள்ளீடுகளைப் பகிரும்போதும் (எ.கா: விமர்சனங்கள், தனிசெய்திகள்) மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.

 

5. பிற பயனர்கள் வெளியிடும் படைப்புகள்/உள்ளீடுகளின் அடிப்படையில் அவர்களுடன் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அத்தகைய பரிவர்த்தனைகளின் எந்த விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு. அதற்கு நிறுவனம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. 

 

6. எங்களுடைய நண்பர்களாக இருந்து எங்கள் வழிகாட்டுதல்களை மீறும்  படைப்புகள் அல்லது உள்ளீடுகளை உடனடியாகப் புகாரளிக்கவும்.

 

7. நிறுவனத்தால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்றவும்.

இந்தப் பதிவு உதவியதா?