அசல் படைப்புகள்

பல்வேறு நிலம் மற்றும் மொழிகளில் உள்ள மனிதர்களை இணையதளம்/செயலி மூலம் கதை-சொல்லலில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு எழுத்தாளர் பதிப்பிக்கும் படைப்புகள் அசலானவையாக இருத்தல் மற்றும் அதை வெளியிடுவதற்கு எழுத்தாளருக்கு சட்டத்தின்படி முழு உரிமையும் இருப்பது அவசியம். காப்புரிமை கொள்கை மற்றும் சட்டத்தின்படி அசல் அல்லாத படைப்புகள், பதிப்பிக்க உரிமைகள் இல்லாமல் பதிப்பிக்கப்படும் படைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. 

 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி குறைந்தபட்ச விதிமுறைகளுக்கு இணங்கவும்:

 

1. எழுத்தாளராக நீங்கள் எழுதிய படைப்புகளை மட்டும் பதிப்பியுங்கள்.

2. எழுத்தாளர் யாரென்று தெரியாத அல்லது பொது தளத்தில் உள்ள (எ.கா: விக்கிப்பீடியா/வாட்ஸ்அப் செய்திகள்) உள்ளடக்கங்களிலிருந்து நகலெடுக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட எந்த படைப்பையும் பதிப்பிக்க வேண்டாம்.

3.பிறருக்குச் சொந்தமான படைப்புகளை நீங்கள் வெளியிட்டால், அதற்கு சட்டத்தின்படி, எழுத்துப்பூர்வ அனுமதிகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

4. எந்தவொரு வடிவத்திலும் அல்லது மொழியிலும் (எ.கா: திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள்) ஏற்கனவே வெளியிடப்பட்ட வேறு எந்தப் படைப்பையும் பகுதியளவில் அல்லது முழுமையாக நகலெடுத்து எந்தப் படைப்பையும் பதிப்பிக்க வேண்டாம்.

5. வேறொருவரின் படைப்பை வேறொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிட சட்டத்தின்படி எழுத்துப்பூர்வ அனுமதிகளைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் எந்தவொரு வருவாய்ப் பங்கீட்டு ஏற்பாடுகளிலும் தொடர்புடைய நபருடன் பரஸ்பரம் உடன்பட்டிருக்க வேண்டும்.

6. வேறொருவரின் படைப்பு அல்லது உள்ளடக்கத்தை மீண்டும் பகிர்வதைத் தவிர்க்கவும். அசல் எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட விரும்பினாலும்,. நீங்கள் அத்தகைய படைப்புகளுக்கு எழுத்தாளரால் கடைபிடிக்கப்படும் எந்தவொரு காப்புரிமை நிபந்தனைகளுக்கும் நீங்கள் இணங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

7. பதிப்பிக்கப்பட்டப் படைப்பு வேறொரு எழுத்தாளருடன் இணைந்து எழுதப்பட்டிருந்தால், அத்தகைய இணை எழுத்தாளரிடமிருந்து பொருத்தமான உரிமைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதை உறுதிசெய்து, வெளியிடப்பட்ட படைப்பில் அத்தகைய நபருக்கு பொருத்தமான அங்கீகாரத்தை  வழங்கவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?