பிரதிலிபியில் பயனர்கள் கணக்கின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். பயனர்கள் தங்கள் கணக்குத் தகவலைத் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டுகிறோம், அதை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர வேண்டாம். மேலும், உங்கள் கடவுச்சொல்லை எந்த சூழ்நிலையிலும் ஒரு பிரதிலிபி ஊழியர் கேட்கமாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளோம்:
ஒரு வலுவான(strong) கடவுச்சொல்
பிறர் யூகிக்க முடியாத அளவு வலுவான கடவுச்சொல்லை உருவாக்கவும். உதாரணமாக, "password123," என்பது சிறந்த தேர்வாக இருக்காது. uppercase மற்றும் lowercase எழுத்துக்கள், எண்கள், symbols ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு வலுவான(strong) பாஸ்வேர்டை உருவாக்கவும்.
அடிக்கடி மாற்றவும்
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமென பரிந்துரைக்கிறோம்.
பாதுகாப்பாக விளையாடுங்கள்
பாதுகாப்பான இணையதளம் வாயிலாக மட்டுமே பிரதிலிபி தளத்தில் (http://tamil.pratilipi.com) லாக் இன் செய்யவும். நாங்கள் உங்களுக்கு அனுப்பும் எந்த சுட்டிகளும் அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும், எனவே பிரதிலிபிக்கு வழிவகுக்கும் என்று கூறும் எந்தவொரு வெளிப்புற சுட்டி குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவும். இதில் மற்ற தளங்களின் இணைப்புகளும் அடங்கும்; தயவு செய்து உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த சுட்டிகளையும் க்ளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் ஆதார் எண் போன்ற ரகசியமான அல்லது முக்கியமான தகவல்களை பிரதிலிபி அதன் பயனர்களிடம் ஒருபோதும் கேட்காது, மேலும் இதுபோன்ற தகவல்களைக் கேட்டு பிரதிலிபியோ அல்லது வேறு எந்த தளமோ தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பாது. பிரதிலிபி இணையதளம் அல்லது செயலிக்கு வெளியேயும் கூட பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதிலிபி ஒருபோதும் கோராது என்பதை நினைவில் கொள்ளவும். பிரதிலிபியில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் போட்டிகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப்படலாம், மேலும் பயனர்களுக்கு அத்தகைய சேவை அல்லது பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் எனும் போது மட்டுமே.
இது போன்ற தகவல்களைக் கோரும் பிரதிலிபியுடன் தொடர்புடையதாகக் கூறும் இணையதளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். இந்த தளங்கள் அல்லது செயலிகள் எந்த வகையிலும் பிரதிலிபியுடன் இணைக்கப்படவில்லை. சந்தேகம் இருந்தால், எப்போதும் எங்கள் குழுவை நேரடியாக அணுகவும்.
உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள், சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், பிரதிலிபி சப்போர்ட் குழுவைத் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.