பிரதிலிபியிடமிருந்து வெரிஃபிகேஷன் லிங்க் (verification link) எதுவும் எனக்கு வரவில்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கும் போது அல்லது உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யும் போது, நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே தகவல்கள் அனுப்பப்படும்.

நீங்கள் மின்னஞ்சலை பெறவில்லை என்றால், பின்வருவனவற்றை சரிபார்க்கவும் 

  • spam பகுதியில் சென்று பார்க்கவும் 

  • பாதுகாப்பான மின்னஞ்சல் அனுப்புநர்கள் பட்டியலில் பிரதிலிபி இருப்பதை உறுதிசெய்யவும்

  • குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் காத்திருங்கள், ஏனெனில் மின்னஞ்சல் வர தாமதமாகியிருக்கலாம்

  • நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை பார்க்கிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும்

கவனிக்கவும்: கடவுச்சொல்லை மாற்ற என்ற மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி எதுவென்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

www.tamil.pratilipi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் பிரதிலிபி முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உள்நுழைக என்பதை க்ளிக் செய்யவும். கடவுச்சொல் நினைவில் இல்லை? என்பதை க்ளிக் செய்யவும் (உள்நுழைக ஆப்ஷனுக்கு கீழே). உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும். நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சலை நீங்கள் பெற்றால், உங்கள் பிரதிலிபி கணக்கு அந்த முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மேலும் ஏதேனும் சிக்கல்கள், சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

 

நீங்கள் லாக் இன் செய்யும் மின்னஞ்சல் முகவரியில் இருந்தே எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

 

இந்தப் பதிவு உதவியதா?