எங்கள் நிறுவனம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, வன்முறையை ஊக்குவிப்பதையோ அல்லது கடுமையான வன்முறையை முன்வைக்கும் படைப்புகளையோ ஆதரிப்பதில்லை:
பதிப்பிக்கப்படும் படைப்புகள்/ உள்ளீடுகள் கண்டிப்பாக:
1. சுய-தீங்கு, பாலியல் வன்முறை அல்லது பயங்கரவாதச் செயல்கள் உட்பட எந்த வடிவத்திலும் வன்முறையை அறிவுறுத்துதல், ஊக்குவித்தல் அல்லது பெருமைப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடாது.
2. ஒரு முன்மதியுள்ள நபரை வெறுப்படையச் செய்யும்விதமாக தீவிர வன்முறையைக் கொண்டிருக்கக்கூடாது.
3. இனப்படுகொலைகளை ஊக்குவிக்கவோ அல்லது மகிமைப்படுத்தவோ கூடாது.
4. தனிநபர்களைத் தூண்டிவிடவோ, ஒருங்கிணைக்கவோ, நேரடியாக அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தக்கூடாது.