ஒரு படைப்புக்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களை நீக்குவீர்களா?

பிரதிலிபியில் விமர்சனம் என்பது ஒரு மதிப்புமிக்க அம்சமாய் இருக்கிறது. இதில் பயனர்கள் ஒரு படைப்பை குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கலாம், அதே சமயம் அவை நட்பு ரீதியிலும் நாகரீகமான முறையிலும் இருக்க வேண்டும். விமர்சனங்கள் பயனரால் எழுதப்படுபவை என்பதால் பிரதிலிபியின் கருத்துக்களை அவை பிரதிபலிப்பதில்லை. எங்களது பொதுவான விதிமுறைகளைப் பின்பற்றி படைப்புகளை பதிப்பிக்க வேண்டும்.  நாங்கள் வேறு எந்த சிறப்பு வழிகாட்டுதலையும் விதிக்கவில்லை.

 

விமர்சனங்கள் அந்த விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் வரை, நாங்கள் அவற்றைத் திருத்தவோ அகற்றவோ மாட்டோம்; அதே சமயம், பிற பயனர்கள் ரிப்போர்ட் அம்சத்தின் மூலம் அந்த விமர்சனத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால், அது எங்களின் படைப்பு விதிமுறைகள் அல்லது தளத்தின் கொள்கை விதிமுறைகளை மீறுவதை நாங்கள் கண்டறிந்தால், அதை நீக்கி விடுவோம். 

 

இந்தப் பதிவு உதவியதா?