கலெக்சன் என்பது என்ன? அதனை எப்படி உருவாக்குவது?

கலெக்சன் பகுதி பிரதிலிபியில் நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள், உங்களுக்கு பிடித்த படைப்புகள் அல்லது அடுத்து என்ன வாசிக்க போகிறீர்கள் போன்றவற்றை பொதுவில் தெரிவிக்க ஏதுவான வசதியாகும். அவற்றை நீங்கள் சுலபமாக பகிர முடியும். மேலும் அவை உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் தெரியும். 

கலெக்சனை உருவாக்கும் வழிமுறை 1 - படைப்பு பக்கத்திலிருந்து :

நீங்கள் ஒரு புதிய கதையை வாசிக்க தேர்ந்தெடுத்தால் இந்தப் பகுதி வரும். இந்தப் பகுதியில் படைப்பு குறித்த விவரம், பிரிவுகள், ரேட்டிங் மற்றும் விமர்சனங்கள் ஆகியவை வரும். 

  1. கலெக்சன் பொத்தானை அழுத்தவும். 

  2. புதிய கலெக்சனை உருவாக்கவும் பொத்தானை அழுத்தவும் அல்லது நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கலெக்சனில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

  3. புதிய கலெக்சனிற்கான பெயரை எழுதி, பின் சமர்ப்பிக்கவும்.

  4. இப்போது நீங்கள் புதிய கலெக்சனை உருவாக்கி அதில் குறிப்பிட்ட கதையை சேர்த்துவிட்டீர்கள்.

வழிமுறை 2 - ப்ரொபைல் பக்கத்திலிருந்து :

  1. செயலியில் வலதுபுறம் மேலே இருக்கும் உங்களது ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்து ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.

  2. பின் ஸ்க்ரால் செய்து கலெக்சன் பகுதிக்கு செல்லவும்.

  3. கலெக்சனிற்கு அடுத்து இருக்கும் மேலும் பார்க்க பொத்தானை அழுத்தவும்.

  4. 'கலெக்சனை உருவாக்க' ஆப்ஷன் தேர்ந்தெடுக்கவும்.

  5. இப்போது நீங்கள் சமீபத்தில் வாசித்த படைப்புகளின் பட்டியலை பார்க்க இயலும். அதிலிருந்து உங்கள் கலெக்சனை உருவாக்க இயலும். 

  6. படைப்புகளை தேர்ந்தெடுத்த பின்னர், கீழே தெரியும் படைப்புகளை சேர்க்க பொத்தானை அழுத்தவும்.

  7. கலெக்சனிற்கு ஏற்ற பெயரை கொடுத்து பின் சமர்ப்பிக்க பொத்தானை அழுத்தவும். 

இந்தப் பதிவு உதவியதா?