சட்டவிரோத நடவடிக்கைகள்

எங்கள் இணையதளம்/செயலி அல்லது அதன் அம்சங்களைப் சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்துவதை நாங்கள் தடைசெய்கிறோம், மேலும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயனர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. அத்தகைய செயல்களுக்கு சட்டத்தின் கீழ் எழும் எந்தவொரு விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள். 

பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:

1. எவரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதற்கு இணையதளம்/செயலி அல்லது எந்த அம்சங்களையும் பயன்படுத்த வேண்டாம்:

அ. மூன்றாம் தரப்பு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட மற்றொருவரின் அசல் படைப்பை இணையதளம்/செயலியில் வெளியிடுதல் அல்லது பயன்படுத்துதல்.

ஆ. சரியான அனுமதியின்றி வேறொருவருக்குச் சொந்தமான படைப்பை இணையதளம்/செயலியில் வெளியிடுதல்.

2. இந்தியாவில் உள்ள எந்தவொரு சட்டத்தினாலும் சட்டத்திற்குப் புறம்பாகக் கருதப்படும் எந்தவொரு செயலையும் மேற்கொள்ள அல்லது ஒருங்கிணைக்க எங்கள் இணையதளம்/செயலி அல்லது எந்த அம்சங்களையும் பயன்படுத்த வேண்டாம்:

அ. சட்டவிரோத பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை, தணிக்கைசெய்யப்பட்ட பொருட்கள், மருந்துகள் மற்றும் பாலியல் சேவைகளை கோருதல் அல்லது விற்பனை செய்தல்.

ஆ. வெடிகுண்டுகளைத் தயாரிப்பது அல்லது ஊக்குவிப்பது அல்லது போதைப்பொருள் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பயனர்களுக்குக் கற்பித்தல்.

இ. இந்திய அரசாங்கத்தால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய எந்தவொரு பரிவர்த்தனை அல்லது பரிசையும் கோருதல் அல்லது வழங்குதல். 

ஈ. ஆள்மாறாட்டம் செய்தல், கணினி வைரஸ்களைப் பதிவேற்றுதல், மால்வேர் அல்லது இணையதளம்/செயலிக்கு பயன்படுத்தப்படும் கணினி வளங்களின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிற கணினி குறியீடுகளை பகிர்தல் போன்ற எந்தவொரு மோசடியான நடத்தையிலும் ஈடுபடுதல்.

 

இந்தப் பதிவு உதவியதா?