உங்கள் பிரதிலிபி கணக்குடன் சரியான மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. பின்வருவனவற்றிற்கு இது தேவை:
-
பாஸ்வேர்டை ரீசெட் செய்ய
-
உங்கள் கணக்கை verify செய்ய
-
பிரதிலிபியில் இருந்து மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற
உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி உபயோகத்தில் இருக்கும் வரையிலும் மற்றும் தற்போதைய கடவுச்சொல் உங்கள் நினைவில் இருக்கும் வரையிலும், எந்த நேரத்திலும் புதிய மின்னஞ்சலை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த மின்னஞ்சலுக்கு verification லிங்க் அனுப்பப்படும். உங்கள் மின்னஞ்சலில் அந்த லிங்கை நீங்கள் verify செய்த பின், மின்னஞ்சல் முகவரி உங்கள் பிரதிலிபி கணக்கோடு இணைக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்வரும் வழிகாட்டியைப் பார்க்கவும்: உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க
ஆண்ட்ராய்டில் இருந்து:
-
உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும்(வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் ப்ரொஃபைல் படத்தை க்ளிக் செய்யவும்)
-
வலது மேற்புறத்தில் உள்ள settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
-
என் கணக்கு என்பதை தேர்ந்தெடுக்கவும்
-
மின்னஞ்சல் மாற்ற என்பதை க்ளிக் செய்யவும்
-
உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்
-
மாற்று என்பதை க்ளிக் செய்யவும்
உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லது நினைவில் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டியைப் பார்க்கவும்: மறந்துவிட்ட மின்னஞ்சல் முகவரி
மேலும் ஏதேனும் சிக்கல்கள், சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் லாக் இன் செய்யும் மின்னஞ்சல் முகவரியில் இருந்தே எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.