பிரதிலிபியில் நான் எப்படி படைப்பு எழுதுவது?

உங்கள் கதையை உலகெங்கிலும், எந்நேரத்திலும் பிரதிலிபியிலிருந்து பகிர்ந்து கொள்ளலாம்! 

கதையைத் தொடங்க, மேலும் அதைச் சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

 

தற்சமயம், பிடிஎஃப் அல்லது வேர்ட் கோப்புகளை பிரதிலிபியில் பதிவேற்றுவது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

 

    5. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.

    6. புதிய வரைவை எழுத என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

 

இப்போது நீங்கள் எழுதும் பக்கத்திற்கு கொண்டு வரப்படுவீர்கள். இங்கே நீங்கள் கதைக்கு தலைப்பிட்டு எழுதத் தொடங்கலாம்.

 

நீங்கள் புகைப்படங்களைச் சேர்க்கலாம் ஆனால் எங்கள் வழிகாட்டுதலை படிக்க மறக்காதீர்கள்: உங்கள் கதையில் மீடியாவைச் சேர்ப்பது

 

நீங்கள் கதையை எழுதி முடித்து, உங்கள் கதைக்கு ஒரு தலைப்பைக் கொடுத்தவுடன், உங்களுக்கு பின்வரும் அம்சங்கள் உள்ளன:

 

  • கதைப் பகுதியை வெளியிட

    - பதுப்பிக்க என்பதை அழுத்தவும்

               - ஒரு தலைப்பைத் தந்து , குறைந்தபட்சம் ஒரு கதைப் பிரிவைத்     தேர்ந்தெடுக்கவும்

                - கதை விதிகளுக்குப் புறம்பாக நகலெடுக்கப்படவில்லை என்று கூறும்  இடத்தில் டிக் செய்யவும்.

                - பதுப்பிக்க என்பதை அழுத்தவும்

 

  • கதைப் பகுதியை சேமிக்க

             -மேல் வலது மூலையில் உள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.

 

  •  கதைப் பகுதியை முன்னோட்டமிட

            - மேல் வலது மூலையில் முன்று கோடுகளைப் போல் இருக்கும்  பொத்தானை அழுத்தவும்.

            - ப்ரீவியூ என்பதை தேர்ந்தெடுக்கவும்

 

தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் ஒரு கதைப் பகுதியை வெளியிட்டால், அது உங்கள் ப்ரொஃபைலில் தோன்றும்.

 

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் சென்று உங்கள் கதையின் எந்தப் பகுதியையும் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?