சூப்பர்ஃபேன் சாட்ரூமில் இருந்து பயனர்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ முடியுமா?

மாதத்திற்கு 25 ரூபாய் செலுத்தி உங்களை சப்ஸ்கிரைப் செய்யும் வாசகர்கள் தானாகவே உங்கள் சூப்பர்ஃபேன் சாட்ரூமில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மீண்டும் மீண்டும் புகார் அளிக்கப்பட்ட செய்திகளை நீங்கள் கண்டால் அல்லது ஒரு குறிப்பிட்ட வாசகரை உங்கள் சூப்பர்ஃபேன் சாட்ரூமிலிருந்து நீக்க விரும்பினால், அவரை சாட்ரூமிலிருந்து அகற்றலாம். சூப்பர்ஃபேன் சாட்ரூமிலிருந்து ஒரு வாசகரை நீக்கிவிட்டால், மீண்டும் அவரை சூப்பர்ஃபேன் சாட்ரூமில் சேர்க்க முடியாது.

 

தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் சூப்பர்ஃபேன் சாட்ரூமிலிருந்து ஒரு வாசகர் அகற்றப்பட்டாலும், அவரால் உங்கள் படைப்புகளை வாசித்து அவற்றிற்கு  விமர்சனங்களை எழுத முடியும். உங்கள் படைப்புகளுக்கு ரேட்டிங்குகளையும் அவரால் வழங்க முடியும். நீங்கள் அவ்வாசகரை அங்கிருந்தும் அகற்ற விரும்பினால், வாசகரை உங்கள் ப்ரொஃபைலிலிருந்து முழுவதுமாக அகற்றுவதற்கான காரணத்தைக் கூறி எங்களைத் தொடர்புகொள்ளவும். நாங்கள் 24 மணி நேரத்திற்குள் அதனை ஆராய்ந்து தீர்வு காண்போம்.

 

இந்தப் பதிவு உதவியதா?