பிரதிலிபியில் லாக் இன் செய்ய உபயோகித்த மின்னஞ்சல் முகவரியை நான் மறந்துவிட்டேன். இப்போது என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லது நினைவில் இல்லை என்றால், அந்த மின்னஞ்சலைக் கண்டறிய பல வழிகள் உள்ளன.

 

உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லாமல் வேறு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டாலும் உங்கள் கணக்கைப் பற்றிய தகவலை நாங்கள் வெளியிட மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளவும், இதில் சரியான மின்னஞ்சல் எது என்பதும் அடங்கும்.

 

உங்கள் மின்னஞ்சலை மறந்துவிட்டீர்கள் எனில்:

 

உங்கள் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் மறந்துவிட்டால், இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:



செட்டிங்ஸ் பக்கத்தை க்ளிக் செய்யவும் 

 

உங்கள் கணக்கு லாக் இன் செய்யப்பட்டு இருக்கிறது அல்லது உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டீர்கள் எனில், செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிந்துகொள்ளலாம்.



பாஸ்வேர்டை ரீசெட் செய்யவும் 

 

பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க் கொண்ட மின்னஞ்சலை உங்களால் அனுப்ப முடிந்தால், சரியான மின்னஞ்சல் முகவரியை நீங்கள் கண்டறிந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கே பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படும்.

 

கடவுச்சொல்லை மாற்ற என்ற மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் உங்கள் பிரதிலிபி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி எதுவென்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

  1. www.tamil.pratilipi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் 

  2. உங்கள் பிரதிலிபி முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உள்நுழைக என்பதை க்ளிக் செய்யவும்

  3. கடவுச்சொல் நினைவில் இல்லை? என்பதை க்ளிக் செய்யவும் (உள்நுழைக ஆப்ஷனுக்கு கீழே)

  4. உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும் 

  5. கடவுச்சொல்லை மாற்ற என்பதை க்ளிக் செய்யவும் 

‘User not found’ என்ற செய்தி கிடைத்தால், நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடன் உங்கள் பிரதிலிபி கணக்கு இணைக்கப்படவில்லை என்று அர்த்தம். 24 மணி நேரத்திற்குள் பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க்கை நீங்கள் பெறவில்லை என்றால், சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

 

மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க:

 

உங்கள் பிரதிலிபி கணக்கில் இருந்து லாக் அவுட் செய்த பின், உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரி மட்டுமே நினைவில் இருந்தால், சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்கள் கணக்கில் நீங்கள் லாக் இன் செய்ய நாங்கள் உதவுவோம். தயவுசெய்து கவனிக்கவும், பிரதிலிபி கணக்கைத் தொடங்கும் போது நீங்கள் குறிப்பிட்ட உங்களுக்கு மட்டுமே தெரிந்த சில கேள்விகளை கேட்போம். அதற்கான பதில்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பிரதிலிபி கணக்கில் லாக் இன் செய்வதற்கு எங்களால் உதவ முடியாது.

இந்தப் பதிவு உதவியதா?