நூலகத்தில் நான் எவ்வாறு கதைகள் சேர்ப்பது அல்லது நீக்குவது?

உங்களது நூலகத்தில் இருக்கும் படைப்புகளின் எண்ணிக்கை அதிகமாகமானால், நூலகம் பகுதி லோட் ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமும் சற்றே அதிகமாகும். 

உங்கள் நூலகத்தை நிர்வகிக்க இரண்டு வழிகள் உள்ளன. மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்:

நூலகத்தில் ஒரு கதையைச் சேர்த்தல்

உங்களுக்கு விருப்பமான கதைகளை தவறவிடாமல் இருக்க நூலகத்தில் கதைகளைச் சேர்க்கவும்.

ஆண்டராய்ட் செயலியில் :

  1. படைப்பை திறக்கவும்.

  2. படைப்புப் பக்கத்தில் இருந்து நூலகம் பொத்தானை க்ளிக் செய்துகொள்ளவும்

ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதும் நூலகத்தில் கதையை சேர்க்க இயலும்.

  1. அதற்கு கதையைப் படிக்கும்போது 'பின்செல்ல' பொத்தானைக் கிளிக் செய்யவும்

  2. லைப்ரரியில் கதையைச் சேர்க்க வேண்டுமா என்று பாப்-அப் திரையில் கேட்கப்படும்

  3. அதில் "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

வெப்சைட்டிலிருந்து :

  1. படைப்பை திறக்கவும்.

  2. படைப்புப் பக்கத்தில் இருந்து நூலகம் பொத்தானை க்ளிக் செய்துகொள்ளவும்

உங்கள் நூலகத்திலிருந்து ஒரு கதையை நீக்குவது குறித்து

எந்த நேரத்திலும் நூலகத்திலிருந்து கதைகளை உங்களால் நீக்கமுடியும்.

தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் படித்த கதைகள் அல்லது உங்கள் நூலகத்தில் முன்பு இருந்தவை பற்றிய வரலாற்றை நாங்கள் சேமிப்பதில்லை. உங்கள் நூலகத்திலிருந்து ஒரு கதையை நீக்கியபின், எதிர்காலத்தில் அதை மீண்டும் படிக்க விரும்பினால் உங்களுக்காக அதை மீண்டும் எங்களால் கண்டுபிடிக்க முடியாது.

ஆண்டராய்ட் செயலியில் :

  1. நூலகம் பொத்தானை க்ளிக் செய்வதன்மூலம் மூலம் உங்கள் நூலகத்தைத் திறக்கவும்

  2. கதைக்கு அடுத்துள்ள 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்யவும்

  3. படைப்பை 'நீக்க' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  4. பின் சரி என்பதை க்ளிக் செய்யவும்

வெப்சைட்டிலிருந்து :

  1. வலது புறம் மேலே இருக்கும் ப்ரொபைல் ஐகானை க்ளிக் செய்து ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும்

  2. நூலகத்திலிருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கவும்

  3. கதையை நீக்க - நூலகம் பொத்தானைக் கிளிக் செய்யவும்

இந்தப் பதிவு உதவியதா?