பிறருடைய ஸ்டோரியை நான் எப்படி பார்ப்பது?

பிரதிலிபியில் நீங்கள் ஃபாலோ செய்பவர்களின் ஸ்டோரியை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் அதுவரை அந்த நபரின் ஸ்டோரியை பார்க்கவில்லை எனில், அவரின் ப்ரொபைல் படத்தை சுற்றி ஒரு வண்ண வளையம் காணப்படும்.

 

மற்றவர்களின் ஸ்டோரியை பார்க்க:

 

முகப்பு பக்கத்தின் மேற்புறத்தில் ஸ்டோரீஸ் காணப்படும். நீங்கள் ஃபாலோ செய்பவர் ஒரு ஸ்டோரியை பதிவு செய்திருந்தால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி அதை நீங்கள் காணலாம்:

 

முகப்பு பக்கத்தின் மேற்புறத்தில் காணப்படும் அந்த நபரின் ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யவும்.

அந்த நபரின் ப்ரொபைல் பக்கத்திற்கு சென்று, அவரின் ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யவும்.

 

உங்கள் முகப்பு பக்கத்தின் மேற்புறத்தில் காணப்படும் ஸ்டோரீக்களை நீங்கள் பார்க்கும் போது, இயல்பாகவே ஒவ்வொரு நபரின் ஸ்டோரியையும் வரிசையாக அடுத்தடுத்து பார்க்க முடியும். அதே சமயம், நீங்கள் செயலியில் வலது அல்லது இடது புறம் ஸ்வைப் (swipe) செய்து நீங்கள் விரும்பும் நபரின் ஸ்டோரியை மட்டும் பார்க்கவும் முடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?