பிரதிலிபியில் எப்படி நான் ப்ரொபைல் உருவாக்கி இணைவது?

பிரதிலிபியில் இணைய விரும்புகிறீர்களா?

 

பிரதிலிபி கணக்கை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன:

 

  1. பிரதிலிபியில் எழுத விரும்பினால், பிரதிலிபி ஆண்ட்ராய்ட்/iOS செயலியை தரவிறக்கம் செய்து அதிலேயே எழுத ஆரம்பிக்கலாம். 

 

  1.  அல்லது பிரதிலிபி தளத்தில் ( http://tamil.pratilipi.com ) உங்களது மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்துவிட்டு கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ லாக் இன் செய்து எழுத ஆரம்பிக்கலாம்.

 

பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் முகவரி கொண்டு உங்கள் பிரதிலிபி கணக்கை உருவாக்கலாம். தயவுசெய்து உபயோகத்தில் இருக்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொண்டு கணக்கை தொடங்குங்கள். உங்கள் பணியிட அல்லது பள்ளி மின்னஞ்சல் முகவரி கொண்டு பிரதிலிபி கணக்கை உருவாக்க வேண்டாம். ஏனெனில், பணியிடம் அல்லது பள்ளியை விட்டு நீங்கள் வெளியேறியதும் அந்த மின்னஞ்சல் முகவரியை உங்களால் உபயோகிக்க முடியாது.

 

எந்த வழியில் உங்கள் பிரதிலிபி கணக்கை தொடங்கினாலும், சில கேள்விகள் கேட்கப்படும். கவலைப்பட வேண்டாம்: எழுத்தாளராக அல்லது வாசகராக நீங்கள் கணக்கைத் தொடங்கினாலும், பிரதிலிபியில் உங்களால் வாசிக்கவும் எழுதவும் முடியும். முதன்முறையாக உள்நுழையும் போது, நீங்கள் தேர்வு செய்யும் வகைகளே நாங்கள் உங்களுக்கு வழங்கும் பரிந்துரைகளின் முதல் தொகுப்பைத் தீர்மானிக்கும். அதன் பிறகு, உங்கள் வாசிப்புப் பழக்கத்தின் அடிப்படையில் முகப்புப் பக்க பரிந்துரைகள் மாறும்.  இதன் விளைவாக, நீங்கள் பல்வேறு வகையான கதைகளை அடிக்கடி வாசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் கதைகளும் மாறும்.

 

பெயர், புனைப்பெயர், பிறந்த தேதி, பாலினம், உங்களைப் பற்றி போன்ற அடிப்படை விவரங்களை உங்கள் சுயவிவரத்தில் சேர்க்கலாம், ஆனால் பெரும்பாலானவை பிற பயனர்களுக்குத் தெரியாது. பிற பயனர்கள் உங்கள் ப்ரொபைலில் எவற்றை பார்க்க முடியும் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, கணக்கு தனியுரிமையைப் பார்க்கவும்.

 

உங்கள் பிரதிலிபி கணக்கு தொடங்கப்பட்டதும், உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவது போன்ற சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால் நாங்கள் உங்களுடன் அந்த மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே தொடர்பு கொள்வோம். மேலும், உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பது விரைவான மற்றும் எளிதான செயலாகும்.

 

உங்கள் பிரதிலிபி கணக்கு உருவாக்கப்பட்டவுடன், உங்களால்:

 

  • பிற பயனர்களைப் பின்தொடரவும்

  • நேரடி குறுஞ்செய்திகளை அனுப்பவும்

  • ஒரு கதையை பதிப்பிக்கவும்

  • கதைகளை விமர்சிக்கவும் மற்றும் ரேட்டிங் செய்யவும்

  • மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறவும் முடியும்.

 

இப்போது நீங்கள் வாசிக்க, எழுத மற்றும் பிரதிலிபி குடும்பத்துடன் இணைய தயாராக உள்ளீர்கள்.  அதே சமயம் எங்கள் சேவை விதிமுறைகளை கவனிக்க மறக்காதீர்கள்: அனைத்து பிரதிலிபி பயனர்களும் எங்கள் நடத்தை விதிகள் மற்றும் படைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

பிரதிலிபிக்கு உங்களை வரவேற்கிறோம்!

 

இந்தப் பதிவு உதவியதா?