பிரதிலிபியில் ஒரு படைப்பை எப்படி படிப்பது?

உங்கள் ப்ரொபைலை தொடங்கி, உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்த்து, உங்களுக்கு பிடித்த வகை கதைகளைக் கண்டறிந்துவிட்டீர்களா? இப்போது படிக்க வேண்டிய நேரம்! நீங்கள் கண்டறியும் கதைகளை தவறவிடாமல் இருக்க, பிரதிலிபி இரண்டு வழிகளை வழங்குகிறது: உங்கள் நூலகம் மற்றும் உங்கள் கலெக்சன்.

உங்களுக்குப் பிடித்த கதைகளைப் சேகரித்துக் கொள்ளவும், உங்கள் ஆர்வத்தை தூண்டும் அனைத்து கதைகளையும் தவறவிடாமல் இருக்கவும் உங்கள் நூலகம் பகுதி சிறந்த வழியாகும். இது உங்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய பகுதி. அதனை வேறு யாராலும் பார்க்க முடியாது. மேலும், பிரதிலிபியில் நீங்கள் கடைசியாகப் வாசித்த படைப்புகளை நூலகத்தில் உள்ள 'சமீபத்தில் வாசித்தவை' பகுதியில் காணலாம்.

உங்கள் நூலகத்தில், நீங்கள் ஆஃப்லைனில் கதைகளை டவுன்லோட் செய்து வாசிக்க முடியும். இவை உங்கள் செயலியில் நேரடியாக டவுன்லோட் செய்யப்படும் கதைகள். எனவே நீங்கள் இணையத்தொடர்பு இல்லாமலும் அவற்றை வாசிக்கலாம்.

கலெக்சன் பகுதி, பிரதிலிபியில் நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள், உங்களுக்கு பிடித்த படைப்புகள் அல்லது அடுத்து என்ன வாசிக்க போகிறீர்கள் போன்றவற்றை பொதுவில் தெரிவிக்க ஏதுவான வசதியாகும். அவற்றை நீங்கள் சுலபமாக பகிர முடியும். மேலும் அவை உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் தெரியும். எனவே அதனை பிற வாசகர்களால் பார்க்க இயலும்.

நீங்கள் ஒரு கதையை படிக்க தேர்வுசெய்தவுடன்,  வாசிப்பு செட்டிங்ஸை உங்களுக்கு தோதான வகையில் மாற்றலாம். நீங்கள் பிரதிலிபி செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் வரி இடைவெளி, ஃபாண்ட் அளவு, ப்ரைட்நெஸ் மற்றும் நைட்மோட் ஆகியவற்றை மாற்ற முடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?