பிரதிலிபி தளம் வெறும் கதைகளின் தொகுப்பு மட்டுமல்ல; ஆர்வமுள்ள வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இணைந்து இயங்கும் சமூகம் இது. அப்படிப்பட்ட சமூகத்தில் நீங்களும் இணைந்து செயல்பட விரும்பினால் பிற பிரதிலிபி பயனர்களுடன் தொடர்புகொள்ள இங்கே பல வழிகள் உள்ளன. பிரதிலிபி தளத்தின் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், தேடலுக்கும் முயற்சிக்கும் இடையேயான ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க நீங்கள் உதவுகிறீர்கள்.
குழுவைக் கண்டறிதல்
பிரதிலிபியில் உங்கள் சிந்தனையோடு ஒத்துப்போகும் குழுவைக் கண்டறிய பல வழிகள் உள்ளன. பல பிரதிலிபி பயனர்கள் கதைகளோடு ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொண்டு, விமர்சன பகுதியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து அதை ஆமோதிக்கும் பயனர்களை தெரிந்துகொள்கிறார்கள். பிற பிரதிலிபி பயனர்களுடன் தொடர்புகொள்வதற்கான அனைத்து வழிகளையும் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
விமர்சனம் / கருத்துகள்
ஒரு குறிப்பிட்ட கதைப்பகுதியை பற்றிய உங்கள் எண்ணங்களை எழுத்தாளர் அல்லது பிற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், நீங்கள் விமர்சனம் செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் அதிகபட்சமாக 2000 எழுத்துகள் வரை இருக்கலாம். மேலும், நீங்கள் எத்தனை விமர்சனம் வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் விமர்சனத்தை நீங்கள் திருத்தலாம்/நீக்கலாம்.
ரேட்டிங்
ஒரு எழுத்தாளருக்கு உங்கள் ஆதரவைக் காட்ட ரேட்டிங் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் வாசிக்கும் கதையின் எந்த அத்தியாயத்திற்கும் நீங்கள் ரேட்டிங் வழங்கலாம்.
பரிசுகள்
ஒரு கதையோடு ஒன்றிப்போக மற்றொரு வழி பரிசுகளைப் பயன்படுத்துவதாகும். ஸ்டிக்கர்கள் மட்டுமே தற்போது பிரதிலிபியில் உள்ள பரிசுகள். உங்களுக்குப் பிடித்த கதை அல்லது எழுத்தாளரை ஆதரிக்க, பிரதிலிபியில் உள்ள பல்வேறு ஸ்டிக்கர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
குறுஞ்செய்தி அனுப்புதல்
நீங்கள் மற்றொரு பிரதிலிபி பயனருக்கு தனிப்பட்ட குறுஞ்செய்தியை அனுப்பலாம், மேலும் இந்த செய்தி உங்களுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காண்பிக்கப்படும். உங்கள் தனிப்பட்ட செய்திகள் உங்கள் இன்பாக்ஸில் சேமிக்கப்படும். நீங்கள் எந்த நேரத்திலும் தனிப்பட்ட உரையாடலை நீக்கலாம். ஆனால் தயவுசெய்து கவனிக்கவும் : அது உங்கள் செயலியில் மட்டுமே நீக்கப்பட்டிருக்கும். மறுபுறத்தில் இருக்கும் பிரதிலிபி பயனரால் அந்த குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும்.
பதிவுகள்/ஸ்டோரீஸ்
உங்கள் ப்ரொபைலை பார்வையிடும் அனைவருக்கும் உங்கள் பதிவு/ஸ்டோரி தெரியும். உங்கள் எண்ணங்களைப் பகிரவும் அல்லது உரையாடல்களில் ஈடுபடவும் இது ஒரு சிறந்த இடம். உங்கள் பதிவுகளில் செய்திகளை பகிரலாம், கதைகளில் இருந்து மேற்கோள்களை பகிரலாம், அல்லது விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம். உங்கள் ஃபாலோவர்களுக்கு செய்திகளைப் பகிர பதிவுகள்/ஸ்டோரீஸ் சிறந்த இடமாகும். உங்கள் பதிவு/ஸ்டோரியில் ஒரு செய்தியை பகிரும்போது, உங்களைப் பின்தொடரும் அனைவரும் உங்கள் புதிய பதிவு/ஸ்டோரி பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள்.
ஃபாலோ செய்வது
பிற பிரதிலிபி பயனர்களை ஃபாலோ செய்வது, பிரதிலிபியில் அவர்களுடன் தொடர்பில் இருக்க சிறந்த வழியாகும். நீங்கள் ஒரு பிரதிலிபி பயனரை ஃபாலோ செய்தால், அவர்கள் பதிவு/ஸ்டோரியில் ஒரு செய்தியை பகிரும்போது அல்லது புத்தம் புதிய கதையை பதிப்பிக்கும் போது நீங்கள் உடனுக்குடன் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். பிற பிரதிலிபி பயனர்கள் உங்களுடன் தொடர்புகொள்வதற்கும் இந்த அம்சம் உதவுகிறது.