நீங்கள் விபத்தாக ஒரு புதிய கதைப் பகுதியை உருவாக்கியிருந்தாலோ அல்லது ஒரு கதைப் பகுதி உங்களுக்குத் தேவையில்லை என்று உறுதியாகத் தெரிந்தாலோ அதை நீக்க உங்களுக்கு வழி உள்ளது. நீங்கள் வரைவுகள், பதிப்பிக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் முழு கதையையும் நீக்கலாம்.
ஒரு கதையின் பகுதியை நீக்கிய பிறகு அதை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லாததால், அதை நீக்க விரும்புகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். நீங்கள் ஒரு கதைப் பகுதியை நீக்கினால், உங்கள் மொத்த வாசிப்புகள்/மதிப்பீடுகளிலிருந்து அப்பகுதியின் வாசிப்புகள் மற்றும் மதிப்பீடுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
ஆன்ட்ராய்டில்:
ஒரு கதைப் பகுதியை நீக்க:
1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.
2. கதைக்கு செல்லவும்
3. கதை பகுதிக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் போலுள்ள பொத்தானை அழுத்தவும்
4. வரைவுக்கு அனுப்ப என்பதை அழுத்தவும்
பதிப்பிலிருந்து அகற்றப்பட்டப் பகுதி தொடருக்குள் தொடர் வரைவுகளில் தனியாக காட்டப்படும். ஒரு பகுதியை நீக்குவதற்குப் பதிலாக, அதை வரைவுக்கு அனுப்பிவைக்கும் வழி உங்களுக்கு உள்ளது, வரைவுக்கு மாற்றப்படும் கதைப் பகுதியை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
நீங்கள் பகுதியை நீக்க விரும்பினால்,
1. வரைவில் இருக்கும் பகுதிக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் போலுள்ள பொத்தானை அழுத்தவும்
2. நீக்க என்பதை அழுத்தவும்
3. நீக்குவதை உறுதிப்படுத்த நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத் தொடரையும் நீக்க, தொடரின் ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து மேலே உள்ள படிகளைப் பின்பற்றவும்.
இணையதளத்தில்:
ஒரு கதைப் பகுதியை நீக்க:
1. மேலே இடம்பெற்றுள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யவும்
2. ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கவும்
3. வரைவுகளுக்கு நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்
4. நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
5. சரி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீக்குதலை உறுதிப்படுத்தவும்
முழுத் தொடரையும் நீக்க, தொடரின் ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து, மேலே தரப்பட்டுள்ள 3 முதல் 5 வரையிலான படிகளைப் பின்பற்றவும்.