அறிமுகம்

எங்கள் படைப்பு வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள அசல் படைப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ஓர் இடைத்தரகராக பின்வருகிற சட்ட விதிகள் உட்பட பல்வேறு சட்டவிதிகளுக்கு பொறுப்பாகிறோம் (i) தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 அதனோடு பொருந்தும் பல்வேறு சட்டங்கள், தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) உட்பட மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்கள் மற்றும் விதிகள்.  2021 (ii) பதிப்புரிமைச் சட்டம், 1957, அதனுடன் தொடர்புடைய திருத்தங்கள் மற்றும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட விதிகள், பதிப்புரிமை மீறல் மற்றும் கருத்துத் திருட்டு தொடர்பான சிக்கல்களை எங்கள் இணையதளம்/செயல்பாடு ஆகியவற்றில் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

பதிப்புரிமை - அறிமுகம்

 

1. பதிப்புரிமை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமையின் ஒரு வடிவமாகும். இலக்கியம், நாடகம், இசை, கலைப் படைப்புகள், ஒளிப்பதிவு படங்கள் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவை காப்புரிமைச் சட்டம், 1957 கீழ் வருகின்றன. (அவ்வப்போது திருத்தப்பட்டபடி) ("காப்புரிமை") .

 

2. ஒரு படைப்பின் பதிப்புரிமை என்பது படைப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டவுடன், எழுத்தாளருக்கு அல்லது எழுத்தாளர் நியமிக்கும் நபருக்கோ சொந்தமானது (“பதிப்புரிமை உரிமையாளர்”) . பதிப்புரிமையை  சட்டத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமில்லை. இருப்பினும், ஒருவர் விரும்பினால் தனது படைப்பை சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம். 

 

3. பதிப்புரிமை அதன் உரிமையாளரை தனது படைப்பை பகுதியளவு அல்லது முழுமையாக மற்றவர்களுக்கு வழங்கி அதை வேறொரு வடிவத்தில் மாற்றிக்கொள்ள ( எ.கா: ஆடியோ, புத்தகங்கள்), அல்லது வணிக ரீதியாகவோ அல்லது வணிகம் அல்லாத வகையிலோ, குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. பதிப்புரிமை அங்கீகரிக்கப்படாத முறையில் படைப்புகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாகத் தடுக்கவும் அதன் உரிமையாளருக்கு உரிமை அளிக்கிறது.

 

இந்தப் பதிவு உதவியதா?