ஆஃப்லைன் வாசிப்பானது இணையத் தொடர்பு இல்லாமலேயே உங்களுக்குப் பிடித்த கதைகளை வாசிக்க உதவுகிறது. உங்களுக்கு பிடித்த கதையெனில், உடனடியாக இணையத் தொடர்பை இணைக்கவும், கதையை ஆஃப்லைன் பட்டியலில் சேர்க்கவும், இணையம் இல்லாமல் அதனை வாசித்து மகிழவும்.
ஆஃப்லைன் நூலக அனுபவம் :
உங்களுக்கு ஆஃப்லைனில் கதைகளை வாசிக்க தேர்ந்தெடுக்கும்படியான வசதியை தருகிறது.
உங்கள் ஆஃப்லைன் பட்டியலில் இருந்து கதைகளை நேரடியாக நூலகத்தில் சேர்ப்பது மற்றும் நீக்குவது போன்ற வசதிகளை தருகிறது.
உங்கள் ஆஃப்லைன் பட்டியலிலிருந்து ஒரு கதையைச் சேர்க்க அல்லது நீக்குவது குறித்து :
-
கதையைச் சேர்க்க: நீங்கள் ஆஃப்லைனில் அதாவது இணைய வசதி இல்லாமல் வாசிக்க விரும்பும் கதையைத் திறந்து, கதையின் விவரப் பக்கத்தில் உள்ள 'டவுன்லோட்' பொத்தானைக் கிளிக் செய்யவும். ப்ரீமியம் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பிரீமியம் கதைகளை டவுன்லோட் செய்ய முடியும் என்பதையும், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 2 ப்ரீமியம் கதைகளை மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
-
ஒரு கதையை நீக்க, உங்கள் நூலகத்திற்குச் சென்று, நீங்கள் நீக்க விரும்பும் கதைக்கு அடுத்துள்ள 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்து படைப்பை நீக்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அதைத் தொடர்ந்து ஆம் என்பதை க்ளிக் செய்யவும்.