எனது பிரதிலிபி கணக்கில் நான் எவ்வாறு மின்னஞ்சல் முகவரி இணைப்பது?

கூகிள் மின்னஞ்சல் முகவரி கொண்டு நீங்கள் ஒரு புதிய பிரதிலிபி கணக்கைத் தொடங்கும் போதெல்லாம், அந்த மின்னஞ்சல் முகவரி உங்கள் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும்.

 

ஆனால், பேஸ்புக் மூலம் பிரதிலிபி கணக்கை நீங்கள் தொடங்கி இருந்தால், உங்கள் பிரதிலிபி கணக்கோடு எந்த மின்னஞ்சல் முகவரியும் இணைக்கப்படாது.

 

எனவே, பிரதிலிபி கணக்கைத் தொடங்கும் போது, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவிடுமாறு அறிவுறுத்துகிறோம். இது உங்களுக்கு பின்வருவனவற்றில் உதவும்:

 

  • பிரதிலிபியிலிருந்து வழக்கமான மின்னஞ்சல் செய்திகளைப் பெறுவது

  • பிரதிலிபியுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது 

  • பிரதிலிபியின் நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்வது 

  • தொலைந்த படைப்புகள்/கணக்குகள் போன்றவற்றை திரும்பப் பெறுவது 

 

மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு சேர்ப்பது?

 

  1. உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும்

  2. வலது மேற்புறத்தில் உள்ள settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

  3. என் கணக்கு என்பதை தேர்ந்தெடுக்கவும் 

  4. மின்னஞ்சல் சேர்க்க என்பதை க்ளிக் செய்யவும்

 

புதிதாக சேர்க்கப்பட்ட இந்த மின்னஞ்சலுக்கு verification லிங்க் அனுப்பப்படும். உங்கள் மின்னஞ்சலில் அந்த லிங்கை நீங்கள் verify செய்த பின், மின்னஞ்சல் முகவரி உங்கள் பிரதிலிபி கணக்கோடு இணைக்கப்படும். சில சமயங்களில், நாங்கள் தினசரி பெறும் மின்னஞ்சல் அளவுகளைப் பொறுத்து அல்லது network சிக்கல் ஆகியவற்றை பொறுத்து நீங்கள் verification லிங்க்கை பெற 24 மணிநேரம் வரை ஆகலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?