குறிப்பு: நாங்கள் தினசரி பெறும் மின்னஞ்சல் அளவுகளைப் பொறுத்து உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க்கை அனுப்ப 24 மணிநேரம் வரை ஆகலாம். 24 மணிநேரத்திற்குப் பிறகும் பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க்கை நீங்கள் பெறவில்லை என்றால், பிரச்சனையை சரிசெய்ய பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் பிரதிலிபி கணக்கில் லாக் இன் செய்வதற்கு உங்கள் பாஸ்வேர்ட் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நேரத்தில் அதை மாற்றிக் கொள்ளலாம் அல்லது மறந்துவிட்டால் ரீசெட் செய்து கொள்ளலாம்.
உங்கள் பாஸ்வேர்ட் குறித்த சில முக்கிய தகவல்கள்:
· இது 6 முதல் 20 எழுத்துகள் வரை இருக்க வேண்டும்
· நீங்கள் upper மற்றும் lowercase எழுத்துக்கள் [A-Z, a-z], எண்கள் [0-9] அல்லது ^%$& போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தலாம்
· நீங்கள் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் அவுட் செய்திருக்கும் போதும் உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்துகொள்ள முடியும்.
· உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்த பின், அனைத்து சாதனங்களில் இருந்தும் தானாகவே உங்கள் ப்ரொஃபைல் லாக் அவுட் ஆகிவிடும்.
· உங்கள் பாஸ்வேர்டை யாருடனும் பகிர வேண்டாம்; உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்!
தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்ய முடியும்; பாஸ்வேர்ட் ரீசெட் லிங்க் கொண்ட மின்னஞ்சலை வேறு எந்த மின்னஞ்சலுக்கும் அனுப்ப முடியாது. அதாவது நீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரி கொண்டு பிரதிலிபி கணக்கை உருவாக்கினால், உங்கள் பாஸ்வேர்டை உங்களால் ரீசெட் செய்ய முடியாது.
உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்ய:
உங்கள் பாஸ்வேர்ட் உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லது நினைவில் இல்லை என்றால், நீங்கள் அதை ரீசெட் செய்யலாம். பாஸ்வேர்ட்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால், settings இல் இருந்து பாஸ்வேர்டை பார்க்க முடியாது.
ஆண்ட்ராய்டில் இருந்து ரீசெட் செய்ய:
-
உங்கள் கணக்கில் இருந்து லாக் அவுட் செய்யவும்
-
செயலியை திறக்கவும்
-
ஈமெயில் கொண்டு லாக் இன் செய்ய வேண்டுமா? இங்கே சொடுக்கவும் என்பதை க்ளிக் செய்யவும்
-
உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்
-
மறந்துவிட்டீர்களா? என்பதை க்ளிக் செய்யவும்
பிரதிலிபி தளத்தில் இருந்து ரீசெட் செய்ய:
-
www.tamil.pratilipi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்
-
உங்கள் பிரதிலிபி முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உள்நுழைக என்பதை க்ளிக் செய்யவும்
-
கடவுச்சொல் நினைவில் இல்லை? என்பதை க்ளிக் செய்யவும் (உள்நுழைக ஆப்ஷனுக்கு கீழே)
-
உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்
-
கடவுச்சொல்லை மாற்ற என்பதை க்ளிக் செய்யவும்
உங்கள் பாஸ்வேர்டை மாற்ற:
உங்கள் தற்போதைய பாஸ்வேர்ட் என்னவென்பதை நீங்கள் அறிந்திருந்தால், settings இல் அதனை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்.
ஆண்ட்ராய்டில் இருந்து:
-
உங்கள் பிரதிலிபி ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும் (வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை க்ளிக் செய்யவும்)
-
வலது மேற்புறத்தில் உள்ள settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
-
என் கணக்கு என்பதை தேர்ந்தெடுக்கவும்
-
கடவுச்சொல்லை மாற்ற என்பதை க்ளிக் செய்யவும்
-
உங்கள் தற்போதைய கடவுச்சொல்லை ஒரு முறையும், உங்கள் புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் பதிவிடவும்.
பிரதிலிபி தளத்தில் இருந்து:
-
உங்கள் பிரதிலிபி முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.
-
Settings ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
-
கடவுச்சொல்லை மாற்ற என்பதை க்ளிக் செய்யவும்
-
உங்கள் தற்போதைய கடவுச்சொல்லை ஒரு முறையும், உங்கள் புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் பதிவிடவும்.
-
மாற்றங்களை சேமிக்க என்பதை க்ளிக் செய்யவும்
மேலும் ஏதேனும் சிக்கல்கள், சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் சப்போர்ட் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் லாக் இன் செய்யும் மின்னஞ்சல் முகவரியில் இருந்தே எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.