பயன்பாட்டு விதிமுறைகள்

Last updated on : 23rd March, 2021 

Below is translation of our Terms of use. To refer origional text, please scroll down or click here

 

பிரதிலிபிக்கு உங்களை வரவேற்கிறோம் மற்றும் பிரதிலிபியை ஓர் முன்னணி கதை சொல்லும் தளமாக மாற்ற உதவியதற்காக எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

பிரதிலிபியின் பயன்பாட்டை முடிந்த அளவிற்குப் பயனர் தோழமையுள்ளதாக ஆக்குவது எங்கள் முயற்சி என்றபோதும், தளத்தை எந்த விதத்திலும் மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடிய, ஆட்சேபனைக்குரிய அல்லது சட்டவிரோத உள்ளுறையற்றதாக வைத்துக்கொள்ள மற்றும் நம்முடைய பயனர்களுக்குச் சட்டப்பூர்வமாகச் சொந்தமான உள்ளுறையை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்க, ஒவ்வொரு பயனரின் உதவியையும் நாங்கள் சார்ந்திருக்கின்றோம். தளத்தைப் பயன்படுத்தும்பொழுது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைப் புரிந்துகொள்ளக்  கீழே உள்ள பயன்பாட்டு விதிமுறைகளைப் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். எதாவது கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளத் தயங்கவேண்டாம். 

பயன்பாட்டு விதிமுறைகள்

 இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் ஏதாவது நபரால் ("பயனர்"/"நீங்கள்"/"உங்கள்") நசாதியா டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிடடின் ("நிறுவனம்"), பிரதிலிபி இணையதளம் (www.pratilipi.com)("இணையதளம்") மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி, IOS செயலி, பிரதிலிபி எப்.எம் மற்றும் பிரதிலிபி காமிக்ஸ் ஆகியவற்றில் கிடைக்கும் பிரதிலிபி செயலி("செயலி") பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.  பல்வேறு மொழிகளில் பட உரு மற்றும் ஒலி வடிவு உட்படப் புத்தகங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் காமிக்ஸ் இது போன்ற பல இலக்கியப் படைப்புகளை ("வெளியிடப்பட்டபடைப்புகள்") படிக்க/கேட்க மற்றும்/அல்லது தரவேற்றம் செய்ய மற்றும் மற்றவர்களின் அத்தகைய இலக்கியப்/ஆடியோ படைப்புகளின் மீது கருத்துக்கள், விமர்சனங்களைத் தரவேற்றம் செய்ய அல்லது இணையதளம்/செயலியில் ("சேவைகள்") சாட்டுகள் ("உள்ளீடுகள்") மூலம் நிறுவனம் மற்றும்/அல்லது மற்ற பயனர்களுடன் தொடர்பு கொள்ள நிறுவனம் வசதிகளைச் செய்து தருகிறது. பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மற்றும் நிறுவனத்தின் படைப்புகள் பொதுவாக "படைப்பு" என்று குறிப்பிடப்படும்.

 

இணையதளம்/செயலியில் நுழைந்து, அதன் சேவைகளைப் பெறுவதன் மூலம்,  தனியுரிமைக் கொள்கையுடன் படிக்கப்பட்ட இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்குவதா ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் நீங்கள் 18 வயதிற்கு மேல் உள்ளீர்கள் என்று மற்றும்/அல்லது நிறுவனத்துடனான பிணைப்பு ஒப்பந்தத்தில் நுழைய அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள் என்று எடுத்துரைக்கின்றீர்கள். நீங்கள் 18 வயதிற்கும் கீழ் இருந்தால், இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளின் உங்கள் ஏற்பு மற்றும் இணக்கத்திற்குப் பொறுப்பான உங்கள் பெற்றோர்(கள்) அல்லது சட்டப்பூர்வப் பொறுப்பாளரிடமிருந்து(களிடமிருந்து) நீங்கள் ஒப்புதல் பெற வேண்டும்.  உங்களிடம், உங்கள் பெற்றோர்(கள்) அல்லது சட்டப்பூர்வப் பொறுப்பாளரிடமிருந்து(களிடமிருந்து) ஒப்புதல் இல்லை என்றால், இணையதளம்/செயலியைப் பயன்படுத்துவதை/அணுகுவதை நீங்கள் நிறுத்த வேண்டும்.

இது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளின் கீழ் உள்ள ஓர் மின்னணு பதிவாகும். எனவே, பயன்பாட்டு விதிமுறைகளைப் பயனர் மீது பிணைப்பதற்குக் கையொப்பம் தேவையில்லை. தகவல் தொழில்நுட்ப (இடையீட்டாளர்கள் வழிகாட்டுதல்கள்) விதிகள், 2011-இன் விதி எண் 3 (1)-இன் கீழ்த் தேவைக்கேற்ப இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பயனரின் பொறுப்புகள்

 சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கீழுள்ள பொறுப்புகளுக்கு இணங்கப் பயனர் ஒப்புக்கொள்கிறார்:

 

  1. துல்லியம்: வலைத்தளம்/செயலியில் பதிவு செய்யும் பொழுது முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க மற்றும் அத்தகைய தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள. மேலும், பயனர் மற்றொரு நபராக ஆள்மாறாட்டம் செய்யக்கூடாது.

  2. இரகசியத்தன்மை: பயனரின் கணக்கு விவரங்களின் இரகசியத்தன்மையைப் பராமரிக்க மற்றும் பயனரின் கணக்கின் மூலமாகச் சேவைகளின் பயன்பாட்டிற்குப் பொறுப்புள்ளவராய் இருப்பது.

  3. உடைமை: பதிவேற்றம் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட படைப்புகளில் உள்ள பதிப்புரிமைகள் முழுமையாகப் பயனருக்குச் சொந்தமானது மற்றும் அது காப்புரிமை, வர்த்தக முத்திரை, பதிப்புரிமை அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பினரின் மற்ற தனியுரிமையை மீறாது என்பதை உறுதி செய்ய.

  4. உள்ளடக்க வழிகாட்டுதல்கள்: வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகள் கீழே 'உள்ளடக்க வழிகாட்டுதல்களில்' குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறாது என்பதை உறுதி செய்ய.

  5. மீளாக்கம்: அதிகாரம் இல்லாமல் மற்ற பயனரின் வெளியிடப்பட்ட எந்த வடிவிலான படைப்புகளையும் வலைத்தளம்/செயலியிலிருந்து மீளாக்கம் செய்து வணிக லாபத்திற்காகவோ அல்லது வேறுவிதமாகவோ மற்ற  ஏதாவது தளத்தில் அல்லது ஊடகத்தில் வெளியிடாமலிருக்க.

  6. உரிமம்:  

    1. வலைத்தளம்/செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட படைப்புகளைச் சாட்டுவதற்கு அவர்களின் பெயர்/பயனர் பெயரை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதற்கான உரிமம்;

    2. எந்த ஊடகத்திலும் அல்லது ஏதாவது வழங்கல் முறை மூலம் தகவமைக்க, வெளியிட, மீளாக்கம் செய்ய, வெளியிடப்பட்ட படைப்பை புணரமைக்க மற்றும் மாற்றவும், உருவாக்க மற்றும்/அல்லது வழங்க, பரப்ப, கைமாற்ற, ஓர் உலகளாவிய, பங்குவீத உரிமையற்ற, பிரத்தியேகமற்ற உரிமை மற்றும் உரிமம்; மற்றும்

    3. பயனருக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் ஏதாவது சாத்தியமான கூட்டுவணிக நோக்கங்களுக்காக ஓர் மூன்றாம் தரப்பிற்கு ஏதாவது வெளியிடப்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கான உரிமையை நிறுவனத்திற்கு வழங்க.

    4. சட்டவிரோதச் செயல்பாடுகள்:ஏதாவது  சட்டவிரோதச் செயல்பாடுகளைச் செய்ய  அல்லது ஏதாவது சட்டவிரோதமான அல்லது மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறும் எதாவது செயல்பாட்டைப் பரிந்துரைக்க, சேவைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.

    5. வைரஸ்: மென்பொருள் வைரஸ்கள் அல்லது சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்படும் ஏதாவது கணினி வளங்களைத் தடை செய்யும், அழிக்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மற்ற ஏதாவது கணினி குறியீடுகள், கோப்புகள் அல்லது நிரல்களைக் கொண்ட எதையும் தரவேற்றம் செய்யாமல் இருக்க.

    6. விளம்பரப்படுத்துதல்: வலைத்தளம்/செயலியில் உள்ள எந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தாமல் அல்லது பரிந்துரைக்காமல் இருக்க.

    7. பாதுகாப்பு: அ) செயலி / தளத்தை பாதிப்படையும் தன்மையை ஆய்வு, ஸ்கேன் அல்லது பரிசோதனை செய்யாமல் இருக்க வேண்டும். ஆ) இணையதளம்/செயலி அல்லது நெட்வொர்க் தொடர்பாகப் பாதுகாப்பு அல்லது அங்கீகார நடவடிக்கைகளைச் சீர்குலைக்காமல் அல்லது மீறாமல் அல்லது வழிகாட்டுதல் அமைப்பை மீறாமல் இருக்க வேண்டும்) இணையதளம்/செயலியின் ஏதாவது பகுதியை "க்ரால்" அல்லது "ஸ்பைடர்" செய்வதற்கு ஏதாவது மனித உள்ளீடு தேவைப்படும் அல்லது தானியங்கு செயலி, சாதனங்கள் அல்லது மற்ற செயல்முறைகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஈ)சேவைகளை மாற்றியமைக்க அல்லது தலையிட அல்லது எந்த வகையிலும் சேவைகள் அல்லது அம்சங்களிலிருந்து தேவையற்ற நன்மைகளைப் பெற ஏமாற்று வகைகள், சுரண்டல்கள், தானியங்கு, மென்பொருள், போட்கள், ஹேக்குகள் அல்லது அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு மென்பொருளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உ) நிறுவனத்தின் உட்கட்டமைப்பில் நியாயமற்ற சுமையை வைக்காமல் இருக்க வேண்டும்.

    8. அணுகல்: அனுமதிக்கப்பட்ட சேவைகளை தனிப்பட்ட உபயோகத்திற்காக மற்றும் வணிகமற்ற நோக்கத்திற்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த வழியிலும் இணையதளம்/செயலியை அணுகக் கூடாது அல்லது வெளியிடப்பட்ட படைப்புகளைப் பெறக்கூடாது.

    9. பயனர் தகவல்: மற்ற பயனர் தொடர்பான தகவலைப் பின்தொடரவோ அல்லது அத்தகைய ஏதாவது தகவலைச் சேமிப்பது மற்றும் சேகரிப்பது உட்பட, அதைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

    10. வணிகக்குறியீடு மற்றும் வடிவமைப்பு: ஏதாவது அனுமதிக்கப்படாத நோக்கத்திற்காக, நிறுவனத்திற்குச் சொந்தமான இணையதளம்/செயலியின் ஏதாவது வடிவமைப்பு அல்லது 'பிரதிலிபி'/பிரதிலிபி எப்.எம்/லோகோ என்ற வணிகக் குறியீட்டைப் பயன்படுத்தாமல், தவறான முறையில் பயன்படுத்தாமல் அல்லது கையாடல் செய்யாமல் இருக்க வேண்டும்.

    11. நியாயமற்ற நடத்தை: வெகுமதிகள் அல்லது சம்பாத்தியங்களை பெறுவதற்கு அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்துதல் அல்லது வலைத்தளம்/செயலியில் வழங்கப்படும் எந்தவொரு நிரலையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது வலைத்தளம்/செயலியில் வேறு ஏதேனும் மோசடி/தவறான செய்கையில் ஈடுபடுவது போன்ற எந்தவொரு நியாயமற்ற நடத்தையிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    12. அணுகல்: பயனரின் தனிப்பட்ட மற்றும் வணிகரீதியான நோக்கங்களுக்காக மட்டுமே சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும் மற்றும் வலைத்தளம் / செயலியை அணுகக்கூடாது அல்லது அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த வழிகளிலும் வெளியிடப்பட்ட படைப்புகளின் உள்ளடக்கத்தைப் பெறவும்.

    13. பயனர் தரவு: மற்றொரு பயனருடன் தொடர்புடைய எந்த தகவலையும் கண்டுபிடிக்கவோ அல்லது சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு தகவலையும் சுரண்டவோ கூடாது.

    14. வர்த்தக முத்திரை மற்றும் வடிவமைப்பு: 'பிரதிலிபி' மற்றும் / அல்லது 'பிரதிலிப்பி எஃப்.எம்' என்ற வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தவோ, தேவையில்லாமல் பயன்படுத்தவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ கூடாது. எந்தவொரு 'பிரதிலிபி' லோகோ அல்லது வலைத்தளம் / பயன்பாட்டின் எந்தவொரு வடிவமைப்பும், அவை எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காகவும் நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை பயன்படுத்த கூடாது.

 

நிறுவனத்தின் உரிமைகள்

 

நிறுவனத்தின் பின்வரும் உரிமைகளைப் பயனர் ஒப்புக்கொள்கிறார்:

 

  1. உள்ளுறையை அகற்றுதல்: எந்த வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகள் ஆட்சேபனைக்குரியது அல்லது அதன் விருப்பப்படி அல்லது சட்டத்தின் கீழ்த் தேவைப்படும்படி விதிமீறினால் அவற்றை அகற்ற நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.

  2. இடைநிறுத்தம்: பயனர் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவது உட்பட, அதன் விருப்பத்தில், ஏதாவது பயனரின் கணக்கை, சேவைகள் அனைத்தையும் அல்லது பகுதியை அணுகுவதிலிருந்து தடை செய்ய/இடைநிறுத்தம் செய்ய/முடிக்க நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.

  3. குறியீடுகள், வடிவமைப்பு மீதான உடைமை : செயலி / தளத்தின் சேவைகள் மற்றும் அனைத்து கூறுகள் உட்பட அனைத்து சின்னங்கள் (லோகோ), வணிகக் குறியீடுகள், ப்ராண்ட் பெயர்கள், சேவைக் குறியீடுகள், டொமைன் பெயர்கள், இணையதளம்/செயலியில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் கிராபிக்ஸ் உட்பட மற்றும் இணையதளம்/செயலியின் மற்ற தனித்துவமான ப்ராண்ட் அம்சங்கள், நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதேபோல் அதில் உள்ள அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் நிறுவனத்திற்கு சொந்தமானது.

  4. தனிப்பட்ட தகவல்: நிறுவனத்தின் எந்தவொரு உள்ளடக்கமும், நிறுவனம் அல்லது அதன் உரிமதாரர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு சொந்தமானது. இந்த பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க சேவையை முறையாகப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தைத் தவிர பயனர்களுக்கு எந்த உரிமைகளும் மாற்றப்படவில்லை.

  5. கட்டணம்: வலைத்தளம்/செயலியில் மெய்நிகர் நாணயத்தை வெளியிடுவது மற்றும் அவை பயனர்களால் பயன்படுத்தக்கூடிய வழி தொடர்பான வலைத்தளம்/செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு அம்சங்களுடனும் தொடர்புடைய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நிறுவனம் தீர்மானிக்கும். அத்தகைய விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி அல்லது வலைத்தளம்/செயலி வழியாக பயனருக்குத் தெரிவிக்கப்படும்.

  6. சட்ட வெளிப்பாடு: நிறுவனமானது, ஏதாவது பயனரின் விவரங்கள் அல்லது வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகள் குறித்த மற்ற ஏதாவது தகவல்களை வெளியிடலாம் அல்லது சட்டம் அல்லது  இணையப் பாதுகாப்பு சம்பவங்களை விசாரணை செய்வதற்கு அதிகாரம் பெற்ற அரசு முகமைகளால் வழங்கப்பட்ட சட்ட உத்தரவின் கீழ்த் தேவைப்படும் மற்ற ஏதாவது நடவடிக்கையை எடுக்கலாம்.

  7. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்: நிறுவனமானது, பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினர்களின் பதிப்புரிமை மீறல்களைத் தடுக்க மற்றும் கையாள அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உண்டாக்குவர்.

உள்ளுறை வழிகாட்டுதல்கள்

 

இணையதளம்/செயலியில் தரவேற்றம் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகள்:

 

  1. ஆட்சேபனைக்குரியதாக அல்லது சட்டவிரோதமாக இருக்கக்கூடாது: பெரிதும் தீங்கு விளைவிக்கும், விதி மீறும், துன்புறுத்தும், இழிவான அவதூறு செய்யும், நயமற்ற, ஆபாசமான, குழந்தைகள் மீதான பாலியல் இச்சையுடைய, அவதூறான, மற்றவரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கும், வெறுப்புடைய அல்லது இன ரீதியாக ஆட்சேபனைக்குரிய, இழிந்துரைக்கும், பணமோசடி அல்லது சூதாட்டம் தொடர்பான அல்லது ஊக்குவிக்கும், அல்லது எந்த விதத்திலும் சட்டவிரோதமாக இருக்கக்கூடிய வெளியிடப்பட்ட படைப்புகளைத் தரவேற்றம் செய்யக் கூடாது.

  2. தேசத்தின் நலனுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது: இந்தியாவின் ஒற்றுமை, நேர்மை, பாதுகாப்பு அல்லது இறையாண்மை, அண்டை மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்தக்கூடிய அல்லது அறிதகு குற்றம் புரியத் தூண்டும் அல்லது எதாவது குற்றத்திற்கான விசாரணையைத் தடுக்கும் அல்லது மற்ற ஏதாவது நாட்டை அவமதிக்கும் வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளைத் தரவேற்றம் செய்யக்கூடாது.

  3. சிறார்களைப் பாதுகாக்கும் - எந்த விதத்திலும் சிறார்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளைத் தரவேற்றம் செய்யக்கூடாது.

  4. தவறாக வழிநடத்துவதாக/ அவமதிப்பதாக இருக்கக்கூடாது:  உள்ளுறையின் மூலம் குறித்து வாசகரை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தும் அல்லது மிகவும் அவமதிக்கும் அல்லது மிரட்டும் பாணியில் உள்ள ஏதாவது தகவலைத் தரும் வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளைப் பதிவேற்றம் செய்யக்கூடாது.

 

இடைநிறுத்தம்/முடிப்பு

 

  1. பயனரால் விதிமீறல்: பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும்/அல்லது தனியுரிமை கொள்கையுடன் ஏதாவது இணக்கம் இல்லை என்றால் இணையதளம்/செயலிக்கான பயனரின் பயன்பாட்டு மற்றும் அணுகல் உரிமைகளைப் பகுதியாக அல்லது முழுமையாக இடைநிறுத்தம் செய்ய அல்லது முடிக்க நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.

எனது நாணயங்கள் சம்பாத்தியம் மற்றும் சப்ஸ்க்ரிப்சன்:

1. எனது நாணயங்கள்: பயனரால் (“எனது நாணயங்கள்”) வாங்கப்பட்ட மற்றும்/அல்லது சம்பாதிக்கக்கூடிய மெய்நிகர் நாணயத்தை மீட்டெடுப்பதன் மூலம் ஒரு பயனருக்கு அவரது கணக்கிலிருந்து வலைத்தளம்/செயலியில் சில அம்சங்களை அணுகும் வாய்ப்பு கிடைக்கும். மீட்டெடுக்கப்படும் எனது நாணயங்களின் எண்ணிக்கை வலைத்தளம் /செயலியில் உள்ள பயனரின் கணக்கில் பிரதிபலிக்கும். எனது ஒரு நாணயத்தின் கொள்முதல் விலை 50 காசுகள், வலைத்தளம் / செயலியில் குறிப்பிட்ட அம்சங்களை அணுகுவதற்குத் தேவையான எனது நாணயங்களின் எண்ணிக்கை அல்லது பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய எனது நாணயங்களை அவ்வப்போது நிறுவனம் தீர்மானிக்கும். எனது நாணயங்கள் எந்த நிஜ உலக மதிப்பையும் கொண்டிருக்கவில்லை, மேலும் வலைத்தளம் / செயலியில் அனுமதிக்கப்பட்டபடி பயனரால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

2. எனது நாணயங்களின் பயன்பாடு: நாணயங்களை ஒரு பயனர் எப்போதெல்லாம் உபயோகிக்கலாம்  (i) ஒரு எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்துகொள்ள மற்றும் / அல்லது (ii) எழுத்தாளருக்கு மெய்நிகர் பரிசுகள் மற்றும் / அல்லது (iii) அவ்வப்போது நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயனர்களுக்கு நாணயங்கள் உபயோகப்படலாம். நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் வலைத்தளம் / செயலியில் எனது நாணயங்களைப் பயன்படுத்தும்போது, ​​பயனர் தனது வலைத்தளம் / செயலியை பயன்படுத்துவது தொடர்பாக சில நன்மைகளை அனுபவிக்கக்கூடும், இது சப்ஸ்கிரைப் செய்த எழுத்தாளரின் படைப்புகளை முன்கூட்டியே வாசிக்க பெறுவது போன்ற நன்மைகள் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அத்தகைய நன்மைகளைத் தவிர, எந்தவொரு வெளியிடப்பட்ட படைப்பிலும் இடமாற்றம் செய்யும் உரிமை, மறுவிற்பனை அல்லது எந்தவொரு உடைமை உரிமைகள் போன்ற வேறு எந்த உரிமைகளும் பயனருக்கு வழங்கப்படாது.

3. எனது நாணயங்களைத் திரும்பப் பெறுதல்: எனது நாணயங்களை வாங்குவதற்கான கட்டணத்தை எந்த நேரத்திலும் பயனரால் திரும்பப் பெற முடியாது. எனது நாணயங்கள் ஒரு வாலட் அல்ல, எனவே உண்மையான பணத்திற்கு எதிராக அதனை மீட்டெடுக்க முடியாது

4. இலவச நாணயங்கள்: வலைத்தளம் / செயலியில் குறிப்பிட்ட வாசிப்பு சவால்களை நிறைவு செய்வது அல்லது எந்தவொரு விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதி போன்ற பயனரின் பயன்பாட்டின் அடிப்படையில் நிறுவனம் ஒரு பயனருக்கு இலவச நாணயங்களை வழங்கும். ஒரு பயனர் எனது நாணயங்களை மீட்டெடுக்கும்போது அவர் வாங்கிய எனது நாணயங்கள் முதலில் பயன்படுத்தப்படும்.

5. சப்ஸ்கிரிப்சன் : சந்தா தொகைகளை (“சந்தா தொகைகள்”) செலுத்துவதன் மூலம் அவ்வப்போது நிறுவனம் தீர்மானித்தபடி, ஒரு பயனர் குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு செயலி / தளத்தில் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளலாம். சப்ஸ்கிரிப்சன் வசதி மூலம் ஒரு மாதத்திற்கு ஒரு எழுத்தாளருக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை நிறுவனம் தீர்மானிக்கும். எந்தவொரு எழுத்தாளருக்கும் சப்ஸ்கிரைப் செய்ய விருப்பம் தெரிவித்தவுடன், ஒரு பயனர் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் வழிமுறையை வலைத்தளம் / செயலியில் உள்ள அவரது கணக்கில் தானாக பணம் செலுத்தும் வழிமுறையில் இணைக்க வேண்டும். தங்கள் கணக்கில் நாற்பது (40) எண்ணிக்கையிலான நாணயங்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு எந்தவொரு எழுத்தாளருக்கும் முதல்முறையாக சப்ஸ்கிரைப் செய்யும்போது மட்டும் தங்களது நாணயங்களிலிருந்து பகுதி தொகையை செலுத்தும் வசதி வழங்கப்படும். அதன்பிறகு தானாக பணம் செலுத்துதல் அவரது இணைக்கப்பட்ட வழிமுறையிலிருந்து நிகழும்.

6. பயனர் உத்தரவாதம்: ஒரு பயனர் எனது நாணயங்களை அல்லது சப்ஸ்கிரிப்ஷன் செலுத்த தேர்ந்தெடுத்தால், (i) அவருக்கு வலைத்தளம் / செயலியில் நாணயங்களை வாங்க / சப்ஸ்கிரிப்ஷன் தொகை செலுத்த அல்லது உபயோகபடுத்த சட்டபூர்வமான திறன் உள்ளது (பயனர் சிறியவராக இருந்தால், பயனரின் சட்டப்பூர்வ பாதுகாவலர் அவர்களின் ஒப்புதலை வழங்கியுள்ளார்) (ii) வலைத்தளம் /செயலியில் கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டண சேவையை அவர் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் உள்ளது, (iii) பரிவர்த்தனைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மை மற்றும் துல்லியமானது என அவர் உத்தரவாதம் அளிக்கிறார்.

7. பணம் செலுத்தும் முறை: (அ) வலைத்தளம் /செயலியுடன் இணைக்கப்பட்ட வாலட்கள் (ஆ) டெபிட்/கிரெடிட் கார்டுகள்; (இ) யுபிஐ; (ஈ) நெட் பாங்கிங்; மற்றும் (உ)பிற கட்டண விருப்பங்கள் மூலம் வலைத்தளம் /செயலியில் உள்ள ஏதேனும் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி எனது நாணயங்களை வாங்க / சப்ஸ்கிரிப்ஷன் தொகை செலுத்த ஒரு பயனர் பணம் செலுத்தலாம். இந்த கட்டண நுழைவாயில்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன, எனவே அத்தகைய கட்டண நுழைவாயில்களின் பயன்பாடு அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படும். மூன்றாம் தரப்பு கட்டண நுழைவாயில் பயனரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக பயனர் ஒப்புக்கொள்கிறார்.

8. சம்பாத்தியம்:  ஒரு எழுத்தாளருக்கு வெகுமதி அளிக்க ஒரு பயனர் எனது நாணயங்களைப் பயன்படுத்தும்போது அல்லது ஒரு எழுத்தாளருக்கு சப்ஸ்கிரிப்சன் முறை மூலம் சப்ஸ்கிரைப் செய்ய முடிவு செய்யும்போது, ​​அத்தகைய எழுத்தாளர் (“(“சம்பாத்தியம் பெறுநர்கள்”) எனது நாணயங்களை அவரது பயனர் கணக்கில் பெறுவார். ஒவ்வொரு நாணயத்தின் இந்திய மதிப்பு 50 காசுகள் ஆகும். ஒவ்வொரு வெகுமதி பெறுநருக்கும் எனது நாணயங்களின் ஐ.என்.ஆர் மதிப்பில் 42 சதவீதத்திற்கு உரிமை தரப்படுகிறது (“சம்பாத்தியம்”). அதேபோல் சப்ஸ்கிரிப்சன் தொகையில் ஐ.என்.ஆர் மதிப்பில் 42 சதவீதத்திற்கு உரிமை தரப்படுகிறது(“சம்பாத்தியம்”). எனது நாணயங்களின் எண்ணிக்கை, அதனுடன் தொடர்புடைய ஐ.என்.ஆர் மதிப்புடன் சேர்ந்து பெறப்பட்ட சம்பாத்தியம் பெறுநரின் கணக்கில் பிரதிபலிக்கும்.

9. சம்பாத்தியங்களை பணமாக மாற்றுதல்: ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும், ஒரு சம்பாத்தியம் பெறுநருக்கு அவரது பயனர் கணக்கில் சம்பாத்தியமாக பிரதிபலிக்கும் முழுத் தொகையும், அதாவது அந்த தொகை INR 50 / - எனும் வரம்புக்கு மேல் இருந்தால் அல்லது நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு அடிப்படை தொகையாக இருந்தால் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகையை செலுத்த, சம்பாத்தியம் பெறுநர்கள் தங்கள் வங்கி கணக்குகளை வலைத்தளம் /செயலியில் உள்ள பயனர் கணக்குகளுடன் இணைக்க வேண்டும். சம்பாத்தியம் பெறுநர் அத்தகைய கட்டணத்துடன் தொடர்புடைய எந்தவொரு வரி அல்லது பிற கட்டணங்களுக்கும் பொறுப்பாவார்.

10. மாற்ற முடியாதது: எனது நாணயங்கள் மற்றும் / அல்லது ஒரு பயனரின் சம்பாத்தியங்கள் அத்தகைய பயனரின் நலனுக்காக மட்டுமே இருக்கும், வேறு எந்த நபருக்கும் மாற்றப்படாது. இதேபோல், எனது நாணயங்களைப் பயன்படுத்தி / சப்ஸ்கிரிப்சன் தொகை செலுத்தி திறக்கப்பட்ட எந்த அம்சங்களும் வேறு எந்த பயனருக்கும் மாற்றப்படாது. ஒரு சம்பாத்தியம் பெறுநருக்கு அவரது பயனர் கணக்குடன் இணைக்க வங்கி கணக்கில் முழு கட்டுப்பாடு இருக்கும். ஒரு பயனர் அவரது பயனர் கணக்கு மூலம் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் முழு பொறுப்பு.

11. எனது நாணயங்கள் மற்றும் சம்பாத்தியங்களை பறிமுதல் செய்தல்:

(அ)பயன்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக அல்லது எனது நாணயங்கள் அல்லது சம்பாத்தியங்களைப் பெறுவதற்கான ஏதேனும் நியாயமற்ற அல்லது மோசடி வழிகளில் ஈடுபடுவதற்காக ஒரு பயனரின் கணக்கை நிறுத்துதல் மற்றும் / அல்லது நிறுத்திவைத்தவுடன், அவரது பயனர் கணக்கில் கிடைக்கும் எனது நாணயங்கள் மற்றும் சம்பாத்தியங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

(ஆ) ஒரு (1) வருட காலத்திற்கு ஒரு பயனர் வலைத்தளம் /செயலியில் செயலற்ற நிலையில் இருந்தால், பயனர் கணக்கில் உள்ள எனது நாணயங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்; வங்கிக் கணக்கை இணைக்காததால் செலுத்தப்படாத எந்தவொரு சம்பாத்தியத்திலும், கூடுதல் மூன்று (3) மாதங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் நிறுவனம் அவர்களைத் தொடர்பு கொண்டாலும், பயனர் தங்கள் வங்கியை இணைக்கத் தவறினால், அத்தகைய மூன்று (3) மாத காலத்தின் முடிவில் அவர்களின் பயனர் கணக்குகளுக்கான கணக்குகள் பறிமுதல் செய்யப்படும்.

(இ)கூடுதலாக, எந்தவொரு பயனரும் இலவச நாணயங்கள் அல்லது சம்பாத்தியங்களை மோசடியாகவோ அல்லது தவறாகவோ பெற்றதாகக் கண்டறியப்பட்டால், அவரது பயனர் கணக்கில் கிடைக்கும் எனது நாணயங்கள் அல்லது சம்பாத்தியங்கள் பறிமுதல் செய்யப்படும்.

12. பணத்தைத் திரும்பப் பெறுதல்: எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் வலைத்தளம் / செயலியில் எனது நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை நிறுவனம் நிறுத்திவிட்டால், கூகிள் கட்டண சேவை கட்டணங்கள் மற்றும் / அல்லது எந்தவொரு பொருந்தக்கூடிய விலக்குகளுக்கும் உட்பட்டு பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் வாங்கிய எனது நாணயங்கள் நிறுவனத்தின் விருப்பப்படி திருப்பித் தரப்படலாம்

13. மாற்றங்கள்: பொருந்தக்கூடிய சட்டத்தின் மாற்றத்தின் காரணமாக எனது நாணயங்கள் மற்றும் / அல்லது சம்பாத்திய அம்சங்கள் தொடர்பாக நிறுவனத்தால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், நிறுவனம் எல்லா பயனர்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கும்.

14. பொருந்தக்கூடியது: எனது நாணயங்கள் மற்றும் / அல்லது சம்பாத்திய அம்சங்களை இணையதளத்தில் கிடைக்குமா அல்லது சில சாதன வகைகளில் (செயலியில்) கிடைக்குமா என்பதை நிறுவனம் அவ்வப்போது தீர்மானிக்கும். ஒரு பயனர் தனது சொந்த கணக்கின் மூலம் உள்நுழைந்திருந்தாலும் பொருந்தாத தளங்களில் இந்த அம்சங்களை அணுக முடியாது.

 

நிறுவனம் ஓர் இடையீட்டாளர்

 

  1. உள்ளுறைகள் பயனர்களின் கட்டுப்பாட்டில்உள்ளது: நிறுவனமானது, முற்றிலும் பயனர்களின் சார்பாக அதன் இணையதளம்/செயலி மூலமாக, வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளைப் பெறுகிறது, சேமிக்கிறது மற்றும் அனுப்புகிறது. பயனர்கள் தங்களது வெளியிடப்பட்ட படைப்புகள் / உள்ளீடுகளின் ஒரே ஆசிரியர்கள் மற்றும் உரிமையாளர்களாக இருப்பர். மேலும், வெளியிடப்பட்ட படைப்புகள்/வெளியீடுகளின் வெளியீட்டை அல்லது படிப்பதை நிறுவனமானது கட்டுப்படுத்தாது அல்லது தடுக்காது அல்லது இணையதளம்/செயலியில் அதைத் தரவேற்றம் செய்வதற்கு முன்னர் மாற்றங்கள் செய்யாது.

  2. நிறுவனமானது ஓர் 'இடையீட்டாளர்' மற்றும் பொறுப்பு இல்லாதது: நிறுவனமானது, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் அதன் விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டதின் படி ஓர் 'இடையீட்டாளர்' மற்றும் இணையதளம்/செயலியில் தரவேற்றம் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளுக்குப் பொறுப்பாகாது.

  3. சட்டத்தின் கீழ்ச் செயல்படவேண்டிய கடமை: நிறுவனம், ஓர் இடையீட்டாளராக, அதன் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் அதன் விதிகளை மீறும் ஏதாவது வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்கும் கடமையைக் கொண்டுள்ளது மற்றும் நிறுவனத்தால் எடுக்கப்படும் அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பயனர் இணங்க வேண்டும்.

 

பொறுப்பு

 

  1. எந்த வகையிலுமான உத்தரவாதமும் இல்லை:இணையதளம்/செயலியில் வழங்கப்படும் அனைத்துச் சேவைகள் மற்றும் படைப்புகள் "இருப்பது போல" என்ற அடிப்படையில் வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த உத்தரவாதமுமின்றி வழங்கப்படுகிறது. நிறுவனம்/இணையதளம்/செயலி, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இணையதளம்/செயலியில் உள்ள எந்த படைப்புபையும் ஆதரிக்கவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை. இணையதளம்/செயலியில் உள்ள செயல்பாடுகள் மற்றும் சேவைகள் தடையற்றதாக அல்லது பிழையற்றதாக இருக்கும் என்று அல்லது இணையதளம்/செயலி அல்லது அதன் சேவையகம் வைரஸ்கள் அல்லது மற்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளைக் கொண்டிருக்காது என்று நிறுவனம்/இணையதளம்/செயலி உத்தரவாதமளிக்காது மற்றும் பயனரின் இணையதளம்/செயலி பயன்பாட்டுடன் தொடர்புடையதாக உள்ள எதாவது மற்றும் அனைத்து அபாயங்களையும் பயனர் இதன் மூலம் ஏற்றுக்கொள்கிறார்.

 

  1. விதிமீறலுக்குப் பயனர் பொறுப்பு: பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ் உங்கள் கடமைகளை மீறுதல் மற்றும் அதன் விளைவுகளுக்கு (அத்தகைய ஏதாவது விதி மீறலால் நிறுவனம் அல்லது அதன் இணை நிறுவனங்கள் அல்லது அதன் பயனர்களுக்கு ஏற்படும் ஏதாவது இழப்பு அல்லது சேதம் உட்பட) நிறுவனம் மற்றும் ஏதாவது மூன்றாம் தரப்பிடம் நீங்கள் தான் ஒரே பொறுப்பு.

 

  1. ஈட்டுறுதி: பயனரால் இணையதளம்/செயலியில் வெளியிடப்பட்ட அல்லது நிறுவனம்/இணையதளம்/செயலிக்கு வழங்கப்பட்ட வெளியிடப்பட்ட படைப்புகள்/உள்ளீடுகளின் பயன்பாட்டிற்காக, நிறுவனம்/இணையதளம்/செயலியை ஈட்டுறுதி செய்து பாதிப்பில்லாமல் வைத்துக்கொள்ளப் பயனர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். எழக்கூடிய அத்தகைய ஏதாவது சட்டரீதியான சச்சரவுகளில் தன்னைத் தற்காத்துக் கொள்ளம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் செலவைப் பயனரிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.

 

  1. மறைமுகப் பொறுப்பு இல்லை: சேவைகளை வழங்குவதால் அல்லது இணையதளம்/செயலியை மற்றவர்கள் பயன்படுத்துவதனால் எழும் பயனர் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு எதிரான ஏதாவது மற்றும் அனைத்துப் பிரத்தியேகமான, தற்செயலான, மறைமுகமான, விளைவான அல்லது தண்டனையான சேதங்கள், இழப்புகளை நிறுவனம் பொறுப்புத் துறப்பு செய்கிறது.

 

குறைதீர்க்கும் அதிகாரி

 

உள்ளுறை வழிகாட்டுதல்கள் உட்பட, இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் ஏதாவது படைப்புகளால் ஏதாவது பயனர் பாதிக்கப்பட்டால், பயனர் அவரது குறைகளை  [email protected] -க்கு எழுதலாம். குறைகளை முப்பது (30) நாட்களில் தீர்க்க நிறுவனம் முயற்சி செய்யும்.

 

எதாவது நபர், இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் ஏதாவது படைப்பு குறித்து அறிந்தால், அத்தகைய நபர், பின்வரும் விவரங்களுடன் குறை தீர்க்கும் அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்:

 

-    புகாரளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரி போன்ற தொடர்பு விவரங்கள்

-    பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் படைப்புகளின் விவரிப்பு.

-        படைப்புகளுக்கு எதிரான புகாரின் தன்மை

-    அத்தகைய படைப்புக்கு வழங்கப்பட்டுள்ள யுஆர்எல் விவரங்கள்.

-    புகாரை நிரூபிப்பதற்காக, பொருந்துமானால்,  துணை ஆவணங்கள்/மூலங்கள் 

-    புகார் ஆவணமானது முறையாக நேரடியாகவோ அல்லது மின்னணு முறையிலோ கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்

 

இதர

 

  1. மாற்றியமைத்தல்: நிறுவனத்திடம் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை ஒருதலைபட்சமாகத் திருத்த அல்லது மாற்றியமைக்க முழுமையான மற்றும் பிர்த்யேகமான உரிமை உள்ளது மற்றும் அத்தகைய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும். பயனரிடம், அவ்வப்போது விதிமுறைகளைச் சரிபார்த்து, அதன் தேவைகளின் மீது நிகழ்நிலையில் இருக்கும் கடமை உள்ளது. அத்தகைய மாற்றத்திற்குப் பிறகும் இணையதளம்/செயலியின் பயன்பாட்டைப் பயனர் தொடர்ந்தால், பயன்பாட்டு விதிமுறைகளில் செய்யப்பட்ட எதாவது மற்றும் அனைத்துத் திருத்தங்கள்/மாற்றங்களுக்குப் பயனர் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும்.

 

  1. சச்சரவுகள்: நிறுவனம் மற்றும் பயனர்(கள்) இடையே செய்யப்பட்ட பயன்பாட்டு விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் மற்ற ஏதாவது ஒப்பந்தங்கள், இந்திய அரசின் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்று மற்றும் தரப்பினர்கள் இடையே எழும் சச்சரவுகளின் மீது பெங்களூர் நீதிமன்றங்களுக்குப் பிரத்தியேகச் சட்ட வரம்பு உள்ளது என்று பயனர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.

 

  1. முரண்பாடு: ஒரு வேளை ஆங்கிலம் மற்றும் இணையதளம்/செயலியில் கிடைக்கும்படி செய்யப்பட்ட மற்ற ஏதாவது மொழியில் பயன்பாட்டு விதிமுறையின் விளக்கத்தில் ஏதாவது முரண்பாடு எழுந்தால், ஆங்கிலத்தில் உள்ளதே கருத்தில் கொள்ளப்படும்.

இந்தப் பதிவு உதவியதா?