உங்கள் கதைகளை உயிர்ப்பிக்க உதவும் வகையில் அவற்றில் படங்கள் மற்றும் வீடியோக்களை இணைக்க பிரதிலிபி அனுமதிக்கிறது!
படங்கள் png, jpg அல்லது jpeg வடிவத்தில், 10MBக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். தற்சமயம், pdf அல்லது ppt கோப்புகளைப் பதிவேற்றுவது சாத்தியமில்லை.
உங்கள் கணினி அல்லது ஃபோனில் இருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது அந்த இடத்திலேயே ஒன்றை படம்பிடிக்கலாம் . இந்தக் கட்டுரையில் உள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் சேர்த்த மீடியாவை அகற்றலாம். உங்கள் படங்கள் அனைத்தும் எங்களின் உள்ளடக்க வழிகாட்டுதல்களுடம் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
ஆன்ட்ராய்டில்:
1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.
2. உங்கள் கதை மற்றும் கதை பகுதிக்கு செல்லவும்
3. எடிட்டிங் அம்சங்கள் காட்டப்படும் கீழ் திரையில் , புகைப்பட ஐகானை அழுத்தவும்
4. உங்கள் கேலரியில் ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது கேமராவைப் பயன்படுத்தி புதிதாக ஒன்றை எடுக்கவும்.
இணையதளத்தில்:
வரைவில் உள்ளக் கதையில் படங்களைச் சேர்க்க
1. வலதுபுறமாக மேலே தரப்பட்டுள்ள எழுத என்பதைக் கிளிக் செய்யவும்
2. உங்கள் கதை வரைவுக்கு செல்லவும்
3. எழுதுமிடத்திற்கு மேலே உள்ள புகைப்பட ஐகானைக் கிளிக் செய்யவும்
பதிப்பிக்கப்பட்டக் கதையில் படங்களைச் சேர்க்க
1. பதிப்பிக்கப்பட்டக் கதையைத் திறக்கவும்
2. படைப்பைத் திருத்த பொத்தானை அழுத்தவும்
3. எழுதுமிடத்திற்கு மேலே உள்ள புகைப்பட ஐகானைக் கிளிக் செய்யவும்
நீங்கள் .jpegs, .pngs மற்றும் .gifs ஆகிய வடிவங்களில் உள்ள புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற முடியும், மேலும் நீங்கள் பதிவேற்றும் முன் உங்கள் புகைப்படங்களை அணுக பிரதிலிபிக்கு அனுமதி தேவைப்படும். இந்த அனுமதிகளை உங்கள் ஃபோன் அமைப்புகளில் சரிபார்க்கலாம்.