வெறுக்கத்தக்க படைப்பு

பிறரை புண்படுத்தும் நோக்கத்துடன் படைப்புகள் / உள்ளீடுகளை வெளியிடுவதை அனைத்து பயனர்களும் தவிர்க்க வேண்டும், மேலும் கீழே வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்:

1. எப்போதும் மரியாதைக்குரிய மொழியைப் பயன்படுத்துங்கள்.

2. சாதி, சமயம், மதம், இனம், பாலினம், பாலின அடையாளம், இயலாமை, தேசிய தோற்றம், நோய் ஆகியவற்றின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுதல் மற்றும் அவற்றின் அடிப்படையில் பிறரைப் புண்படுத்தி, பகையைத் தூண்டும்படியான மொழியை பயன்படுத்துதல் கூடாது. 

3. பதிப்பிக்கப்படும் படைப்புகள்/உள்ளீடுகளில் இனப்படுகொலைகளை  மகிமைப்படுத்தவோ அல்லது ஊக்குவிக்கவோ கூடாது.

4. உங்களது ப்ரொஃபைலில் வெறுக்கத்தக்கப் புகைப்படங்கள், மொழி (இனவெறி அல்லது சாதிய அவதூறுகள் உட்பட, ஆனால் அவை மட்டுமல்ல) அல்லது சின்னங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

5. எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் அல்லது நபர்கள் சார்ந்த குழுவையும் குறிவைக்க, கேலி செய்ய, அவமானப்படுத்த, அல்லது கொடுமைப்படுத்த, இணையதளம்/செயலியைப் பயன்படுத்தாதீர்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?