போலி ஈடுபாடுகள்

பயனர்களுடனான இணையதளம்/செயலியின் தொடர்பு மற்றும் பயனர்களுக்கு இடையேயான தொடர்பு உண்மையானதாகவும் மற்றும் எந்த வகையிலும் அதில் தவறு நிகழாமல் இருக்கவேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம். எனவே, பின்வருவனவற்றை நாங்கள் தடை செய்கிறோம்:

 

1. எந்தவொரு பதிப்பிக்கப்பட்ட படைப்பு அல்லது பயனரின் கவனத்தை செயற்கையாக அதிகரிக்கும் அல்லது குறைக்கும் வகையில் இணையதளம்/செயலியில் ஏதேனும் அம்சங்களைப் பயன்படுத்துதல்.

 

2. பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளுடன் (வாசிப்புகள், வருவாய்கள், மதிப்பீடுகள், கருத்துகள் அல்லது பின்தொடர்தல் போன்றவை) ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக வாசகர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே படைப்புகளை வெளியிடுதல், வெளி ஊடகங்களிலிருந்து படைப்புகளை மீண்டும் மீண்டும் வெளியிடுதல், இணையதளம்/செயலி ஆகியவற்றில் உள்ள உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் நகலெடுப்பது.

 

3. எங்கள் கொள்கைகளை மீறும் சேவைகளை வழங்கும் அல்லது வழங்குவதாகக் கூறும் விசியங்களின் இணைப்புகளைச் செருகுதல், அல்லது ஏதேனும் நம்பகத்தன்மையற்ற அல்லது சட்டவிரோத நடத்தையை ஒருங்கிணைக்க அல்லது விளம்பரப்படுத்த/ சந்தைப்படுத்தப் பயன்படுத்தப்படும் வெளிப்புற விசியங்களின் இணைப்புகளைச் செருகுதல்.

 

4. எந்தவொரு பதிப்பிக்கப்பட்டப் படைப்பின் மதிப்புரைகள் அல்லது மதிப்பீடுகளை எந்த வகையிலும் தவறாக கையாளுதல்.

 

5. போலியான ஈடுபாட்டை உருவாக்க அல்லது இணையதளம்/செயலியில் உள்ள அம்சங்களைக் கையாள பயனர்களுக்கு நிதிச் சலுகைகளை வழங்குதல்.

 

6.  பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளின் மதிப்பீடுகளை செயற்கையாக அதிகரிக்க மற்ற பயனர்களுடன் ஒருங்கிணைந்த செயலில் ஈடுபடுதல் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் நற்பெயரைப் பாதிக்கும் நோக்கத்துடன் மதிப்பீடுகளைக் குறைத்தல்.

 

7. விமர்சனங்கள் அல்லது பிற ஊடகங்கள் மூலம் மற்ற பயனர்களுடன் ஒருங்கிணைந்த செயலில் ஈடுபட்டு எந்தவொரு எழுத்தாளருக்கும் அல்லது அவரது பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளுக்கும் தீங்கிழைக்கும் வகையில் குறிவைத்தல், அவதூறு செய்தல், துன்புறுத்தல், துஷ்பிரயோகம் செய்தல்.

 

8. தவறான தகவல்களைப் பயன்படுத்தி போலியான ப்ரொஃபைலை உருவாக்குதல், எங்கள் தளத்தில் உள்ள வேறொரு நபரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்துதல் அல்லது நீங்கள் நீங்கள் அல்லாத வேறொருவர் எனக் கூறுதல் அல்லது வேறு வழிகளில் ஆள்மாறாட்டம் செய்தல்.

 

இந்தப் பதிவு உதவியதா?