பிரதிலிபியின் கலந்துரையாடல் பகுதியை நான் எப்படி உபயோகிப்பது?

பிரதிலிபி கலந்துரையாடல் பகுதி என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான ஒரு பிரத்யேக அம்சமாகும், அங்கு நாங்கள் தினசரி அடிப்படையில் வெவ்வேறு வகைகளிலிருந்து வெவ்வேறு கேள்விகளை பதிவிடுவோம். தலைப்பிற்கு உகந்த உங்களது மதிப்புமிக்க கருத்துகள், எண்ணங்கள் அல்லது அனுபவங்களை பகிர்ந்து, சக உறுப்பினர்களுடன் அதைப் பற்றி விவாதிக்கலாம்.

உரையாடல்கள் மற்றும் ஆக்கபூர்வமான வாதங்கள் எப்போதும் நமது கலாச்சாரத்தின் முக்கிய சாரமாக இருந்து வருகிறது. வயது அல்லது செய்யும் தொழிலைக் கடந்து ஒவ்வொருவராலும் வெவ்வேறு விதமான அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, சக உறுப்பினர்களுடன் தினசரி தலைப்புகளில் தங்கள் எண்ணங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்ள எங்கள் தினசரி கலந்துரையாடல் பகுதியைப் பயன்படுத்தலாம். மேலும் அதில் பங்கேற்பதன் மூலம், நாள் முடிவில் ஒருவர் பல்வேறு நபர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிவைத் திரட்டி, தொகுத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்.

பிரதிலிபி முகப்புப் பக்கத்தில், நீங்கள் சிறிது கீழே ஸ்க்ரோல் செய்தால், வெவ்வேறு வண்ணங்களில் குறிக்கப்பட்ட தினசரி கேள்விகளைக் காண்பீர்கள். ஒரு நாளின் கேள்வியைக் கிளிக் செய்தால் போதும், தலைப்பில் உங்கள் சொந்த பதிலை இடுகையிடவும், மற்ற உறுப்பினர்களின் பதில்களை விரும்பவும், கருத்து தெரிவிக்கவும் வழியைக் காண்பீர்கள்.

அதிகமான விருப்பங்கள் மற்றும் கருத்துகளைப் பெற ஒரு சுவாரஸ்யமான பதிலை வழங்கவும். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியைப் பார்வையிடுவதால், ஓர் எழுத்தாளராக அதிக பார்வையைப் பெற தினமும் உரையாடலில் பங்கேற்கவும்.

பிரதிலிபி செயலியின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று சிறிது கீழே ஸ்க்ரோல் செய்யவும். தினசரி கேள்விகள் வெவ்வேறு வண்ணங்களில் குறிக்கப்பட்ட கலந்துரையாடல் பகுதியைக் காண்பீர்கள். உங்கள் சொந்த பதிலை வழங்க ஒரு நாளின் கேள்வியைக் கிளிக் செய்யவும் அல்லது பிறரின் பதில்களுக்கு லைக்/கமெண்ட் செய்யவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?