பிரதிலிபியில் எப்படி எனது ப்ரொபைல் படத்தை சேர்ப்பது?

நீங்கள் உங்களது கணக்கை தொடங்கி, மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்துவிட்டீர்கள் எனில், உங்களது ப்ரொபைல் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் உங்களது ப்ரொபைல் படத்தையும் சேர்க்க இயலும். உங்களைப் பற்றி வாசகர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதை 'உங்களைப் பற்றி' பகுதியில் கொடுக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு பிடித்த வகை கதைகள், உங்களது பொழுதுபோக்கு, எத்தனை நாளாக எழுதுகிறீர்கள், ஏன் எழுதுகிறீர்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்! அதிகபட்சம் 5000 கேரக்டர்கள் வரை உங்களைப் பற்றி எழுதமுடியும். 

'உங்களைப் பற்றி' பகுதியில் லிங்க் கொடுப்பதை தவிர்க்க அறிவுறுத்துகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக, அங்கே லிங்க் கொடுத்தால் அதனை க்ளிக் செய்ய முடியாதபடி மாற்றிவிடுவோம். 

உங்கள் கணக்கு default ப்ரொபைல் படத்துடன் தொடங்கும். மேலும் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் உங்களது ப்ரொபைல் படத்தை மாற்றிக் கொள்ள முடியும். 

ப்ரொபைல் படத்தை மாற்றுமுன், கீழே உள்ளவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவும்:

  1. நீங்கள் பிரதிலிபி செயலியை உபயோகிக்கிறீர்கள் எனில், புகைப்படங்களை அக்சஸ் (access) செய்ய நீங்கள் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். இதனை உங்களது மொபைல் செட்டிங்ஸ் சென்று சரிபார்க்க முடியும்.

  2. நீங்கள் அப்லோட் செய்யும் படம் .jpg அல்லது gif ஃபைலாக இருக்க வேண்டும். மேலும் அது 1MB -க்கும் மேலாக இருக்கக் கூடாது.

  3. நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படம் தடைசெய்யப்பட்ட படமாக, பதிவேற்ற உகந்ததில்லாத படமாக இருக்கக் கூடாது. இதுகுறித்து எங்களது படைப்பு குறித்த வழிகாட்டுதல் பகுதியில் விரிவாக பார்க்க இயலும்.

இந்தப் பதிவு உதவியதா?