வாசிப்பு சவால் குறித்து நான் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

1. ரீடிங் சேலஞ்ச் என்பது என்ன?

பிரதிலிபியின் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த ரீடிங் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு தினமும் தொடர்ந்து முழு படைப்பை வாசித்து வந்தால் நீங்கள் நாணயங்களை வெல்லலாம்.

2. ரீடிங் சேலஞ்சை தொடங்குவது எப்படி? 

ரீடிங் சேலஞ்சில் கலந்துகொள்ள நீங்கள் முதலில் அதில் இணைய வேண்டும். கீழுள்ள படிகளை பின்பற்றி ரீடிங் சேலஞ்சைத் தொடங்கலாம்.  

  • உங்களது ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும். 

  • ரீடிங் சேலஞ்ச் பக்கத்திற்கு செல்லவும். 

  • ரீடிங் சேலஞ்சில் இணையவும் (opt-in)

3. நாணயங்கள் வெல்ல எத்தனை நாட்கள் தொடர்ந்து வாசிக்கவேண்டும்?

அதில் இரண்டு விதமான சேலஞ்ச் உள்ளன.

I. 7 நாள் சேலஞ்ச் - நீங்கள் தினமும் தொடர்ந்து 7 நாட்கள் வாசிக்க வேண்டும். (ஒரே ஒரு படைப்பாவது முழுமையாக வாசிக்க வேண்டும்). இந்த சேலஞ்சில் நீங்கள் வெற்றி பெற்றால் 5 நாணயங்கள் பெறுவீர்கள்.

II. 21 நாள் சேலஞ்ச் - நீங்கள் தினமும் தொடர்ந்து 21 நாட்கள் வாசிக்க வேண்டும். இந்த சேலஞ்சில் நீங்கள் வெற்றி பெற்றால் 25 நாணயங்கள் பெறுவீர்கள். 7 நாள் ரீடிங் சேலஞ்சிற்கான 5 நாணயங்கள், 7 நாட்கள் தொடர்ந்து வாசித்து முடித்த உடனேயே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதேபோல் 21 நாட்கள் தொடர்ந்து வாசித்து முடித்ததும் உங்கள் கணக்கில் 20 நாணயங்கள் வரவு வைக்கப்படும். (மொத்தம் 25 நாணயங்கள்).

சேலஞ்சை முடித்தவுடன் , புதிய சேலஞ்சிற்கு முதலிலிருந்து பங்கேற்கவேண்டும். 

4 . சேலஞ்சின் இடையில் ஒரு நாள் தவறவிட்டால் என்னவாகும்?

அப்படி இருப்பின், நீங்கள் சேலஞ்சில் இருந்து வெளியேறிவிடுவீர்கள். திரும்பவும் நாள் ஒன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ரீடிங் சேலஞ்ச் பக்கத்திற்கு சென்று ரீடிங் சேலஞ்சில் இணையவேண்டும். 

5 . 7 நாள் ரீடிங் சேலஞ்ச் வெற்றிகரமாக முடிந்ததும் ஒரு நாள் தவறவிட்டால் என்னவாகும்? 21 நாள் ரீடிங் சேலஞ்சிலிருந்து வெளியேறிவிடுவேனா?

ஆம். 21 நாள் ரீடிங் சேலஞ்சிலிருந்து வெளியேறிவிடுவீர்கள். ஆனாலும் 7 நாட்கள் தொடர்ந்து வாசித்து முடித்த உடனேயே உங்கள் கணக்கில் 5 நாணயங்கள் வரவு வைக்கப்பட்டுவிடும். 

6. பிரதிலிபி தளத்தில் (வெப்சைட்) வாசித்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

இல்லை. இப்போதைக்கு பிரதிலிபி தளம் மற்றும் IOS செயலி ஆகியவற்றில் ரீடிங் சேலஞ்சை சப்போர்ட் செய்யவில்லை. எனவே ரீடிங் சேலஞ்சில் வெற்றி பெற பிரதிலிபி ஆண்ட்ராய்ட் செயலியிலேயே வாசிக்க வேண்டும்.  

7 . ரீடிங் சேலஞ்ச் ஒருமுறை முடித்தவுடன் திரும்பவும் புதிதாக ஆரம்பித்துக் கொள்ளலாமா?

ஆம். எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடிங் சேலஞ்சை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரீடிங் சேல்ஞ்ச பக்கத்திற்கு சென்று நீங்கள் சேலஞ்சைத் தொடங்கவேண்டும். 

8 . ரீடிங் சேலஞ்சில் வென்ற நாணயங்களை எங்கே பார்க்கலாம்?

சேலஞ்சை முடித்தவுடன் , நீங்கள் அதற்கான நாணயங்களை கோர வேண்டும். நாணயங்களை கோரினால் 'என் நாணயங்கள்' பகுதியில் உங்களுக்கான நாணயங்கள் உடனடியாக சேர்ந்துவிடும். முகப்பு பக்கத்தில் மேலே தெரியும் நாணயங்கள் ஐகானை க்ளிக் செய்தால், 'என் நாணயங்கள்' பகுதிக்கு செல்லமுடியும். மேலும், கடந்த காலத்தில் ரீடிங் சேலஞ்ச் மூலம் நீங்கள் வென்ற நாணயங்களின் விவரங்களையும் 'என் நாணயங்கள்' பக்கத்தில் 'பரிவர்த்தனை விவரங்கள்' ஆப்ஷனை க்ளிக் செய்து பார்க்க இயலும்.  

9  . நாணயங்களை எவ்வாறு கோருவது? 

  நாணயங்களைக் கோர கீழுள்ள படிகளை பின்பற்றவும்.             

     -  உங்களது ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும். 

     -  ரீடிங் சேலஞ்ச் பக்கத்திற்கு செல்லவும். 

     -  ‘நாணயங்களைக் கோர’ என்ற ஆப்ஷனை சொடுக்கி  நாணயங்களைப் பெறவும். 

இந்தப் பதிவு உதவியதா?