எனக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை நான் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உங்கள் நோட்டிஃபிகேஷன்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. செயலியில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்கள் ஆகியவற்றை ஆன் அல்லது ஆஃப் செய்யும் வழிமுறைகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 

பிரதிலிபியில் நான்கு வகையான அறிவிப்புகள் உள்ளன:

 

  • மின்னஞ்சல் அறிவிப்புகள்

  • பிரதிலிபியின் வாராந்திர மின்னஞ்சல்கள் 

  • குறுஞ்செய்தி அறிவிப்புகள் (செயலிக்கு வெளியே தோன்றும் அலெர்ட்கள்)

  • தனிப்பட்ட குறுஞ்செய்திகள்

  • செயலியில் உங்கள் பதிவுகள்/விமர்சனங்களுக்கு வரும் பதில்கள் குறித்த அறிவிப்புகள்

  • புதிய மதிப்பீடு, புதிய விமர்சனம், புதிய விமர்சனம், விருப்பங்கள்

  • நெட்வொர்க் அறிவிப்புகள்

  • புதிய ஃபாலோவர், நீங்கள் ஃபாலோ செய்பவர்களின் புதிய படைப்புகள், பதிவுகள் மற்றும் அவை தொடர்புடைய விமர்சனங்கள், பிரதிலிபி சலுகைகள் & அப்டேட்ஸ்.

 

விமர்சனத்தின் பதிலுக்கான நோட்டிஃபிகேஷன்களை எழுத்தாளர் மட்டுமே காணலாம். மற்ற வாசகர்கள் அதற்கு பதிலளிக்கும் போது பிற பயனர்களுக்கு அறிவிப்பு செல்லாது.

 

ஆண்ட்ராய்டில் இருந்து:

 

  1. உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும்(முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யவும்)

  2. வலது மேற்புறத்தில் இருக்கும் Settings பட்டனை க்ளிக் செய்யவும் 

  3. அறிவிப்புகள் பகுதியை க்ளிக் செய்யவும் 

  4. நீங்கள் பெற விரும்பும் நோட்டிஃபிகேஷன்களை தேர்வு செய்யவும்.

இந்தப் பதிவு உதவியதா?