இணையதளம்/செயலியில் பதிப்பிக்கப்பட்ட படைப்புகளோடு பதிப்புரிமை எவ்வாறு பொருந்துகிறது.
1. பயன்பாட்டு விதிமுறைகளின்படி, நிறுவனத்திற்கு பயனருக்குரிய படைப்புகளை வெளியிடுவதற்கான வரையறுக்கப்பட்ட உரிமை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதில் வெளியிடுவது மற்றும் அதை இணையதளம்/செயலியில் காண்பிப்பது உள்ளிட்டவை அடங்கும். மேலும் பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மீது நிறுவனத்திற்கு வேறு பதிப்புரிமைகள் ஏதும் இல்லை.
2. கூடுதலாக, பயன்பாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி, பதிப்பிக்கப்படும் படைப்புகளுக்கு நிறுவனம் ஓர் இடைத்தரகர் பாத்திரத்தை வகிக்கிறது. எனவே, நிறுவனத்தின் பங்கானது பயனர்களிடமிருந்து பதிப்பிக்கப்படும் படைப்புகளைப் பெறுதல்/சேமித்தல்/பரிமாற்றம் செய்வதோடு முடிந்துவிடுகிறது. மேலும் நிறுவனம் வகிக்கும் அப்பங்கு இணையதளம்/செயலியில் வெளியிடப்பபடும் படைப்புகளை மாற்றத் தொடங்குதல், மாற்றுதல், படைப்பிற்குரியவரை தேர்வு செய்தல் வரை நீட்டிக்கப்படவில்லை . மேலும், வெளியிடப்படும் படைப்புகளுக்கு நிறுவனம் நேரடியாகப் பொறுப்பேற்காது, சட்டம் மற்றும் உள்ளகக் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு பொருத்தமற்றதாக வெளியிடப்படும் படைப்புகளை அகற்ற மட்டும் பொறுப்பேற்கிறது.