பிரதிலிபி மேலும் பல புதிய கதைகளை நான் எங்கனம் கண்டறிவது?

பிரதிலிபியில் ஏதேனும் கதையை தேட வேண்டுமெனில் இரண்டு விதமாக தேட முடியும். முகப்பு பக்கம் வழியாக அல்லது தேட பகுதி வழியாக இதனை செய்யலாம்.

முகப்பு பக்கத்தில் பிரதிலிபி எழுத்தாளர்களின் பல படைப்புகள் பரிந்துரைக்கப்படும். அவை போட்டிகள் மூலமாகவும், டிரெண்ட் ஆவதன் மூலமாகவும் தெரிவு செய்யப்படும். மேலும் உங்களது முகப்பு பக்கத்தில் பரிந்துரைக்கப்படுபவை உங்கள் வாசிப்பு பழக்கத்தின் அடிப்படையில் மாறுபடும். இதன் விளைவாக, நீங்கள் பல வகைகளில் படைப்புகள் வாசிக்கும்போது, உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்புகளும் மாறுபடும். 

அதேபோல், முகப்பு பக்கத்தில் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகள், தினசரி தொடர்கள், பிரதிலிபி ப்ரீமியத்தின் தொடர்கள் ஆகியவையும் இருக்கும். ப்ரீமியம் கதைகள் பிரதிலிபியின் எடிட்டர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுபவை. 

பிரதிலிபியில் இன்னும் பலவிதமான படைப்புகளை நீங்கள் வாசிக்க விரும்பினால், 'தேட' பகுதிக்கு செல்லவும். இங்கே நீங்கள் எழுத்தாளரின் பெயர் மற்றும் படைப்பின் பெயர் ஆகியவற்றைக் கொண்டு தேடமுடியும். மேலும் குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த படைப்புகள், குறிப்பிட்ட பிரிவு சார்ந்த படைப்புகள் மற்றும் தொடர்கள் ஆகியவற்றையும் தேடமுடியும். 

ஒரு படைப்பு உங்களுக்கு பிடித்திருக்கும்பட்சத்தில், அதனை உங்களது நூலகத்திலோ அல்லது கலெக்சனிலோ சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறோம். இது திரும்ப அந்த படைப்பை தேடுவதை எளிதாக்கும். கிட்டத்தட்ட 30 லட்சம் கதைகளில், உங்களுக்கு விருப்பமான நல்ல கதைகளை நீங்கள் தவற விடாமல் இருக்கும் இது உதவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?