தொடர்பு

பயனர் அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ளவும் பிரதிலிபி சமூகத்தில் ஈடுபடுவதற்கும் இணையதளம்/செயலியில் பயனர்கள் பல அம்சங்களைக் கொண்டுள்ளனர். இவற்றை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இந்த அம்சங்களைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு பயனரும் பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறும், கீழே உள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

பயனர்கள் உள்ளீடுகளின் தன்மையில் பிற வடிவங்களில் உள்ள உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக நிறுவனம் அவ்வப்போது இணையதளம்/செயலியில் சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தலாம், மதிப்பாய்வு மற்றும் விமர்சன வழிகாட்டுதல்கள் மற்றும் சாட் வழிகாட்டுதல்கள் உட்பட நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் பொருந்தக்கூடிய அளவிற்கு அத்தகைய உள்ளீடுகளை வெளியிட வேண்டும். 



விமர்சனம் மற்றும் கருத்து வழிகாட்டுதல்கள்

 

எங்களின் வழிகாட்டுதல்கள்/கொள்கைகள் எதையும் மீறும்  தன்மையில் உள்ள எந்த விமர்சனங்களையும் நாங்கள் அகற்றலாம் மற்றும் மீண்டும் மீண்டும் அல்லது தீவிரமான மீறல்கள் நிகழ்ந்தால் மீறும் ப்ரொஃபைல்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படலாம். 

 

1. படைப்புகளை சரியாக மதிப்பிடவும் (ஒரு நட்சத்திரம் என்பது குறைந்தபட்சம்  மற்றும் ஐந்து நட்சத்திரங்கள் என்பது அதிகபட்சம்).

 

2. எங்களது படைப்பு/உள்ளடக்க வழிகாட்டுதல்களை மீறும் எதையும் விமர்சனங்களில் இட வேண்டாம்.

 

3. நீங்கள் மற்றவர்களின் படைப்புகளை மரியாதையுடன்  விமர்சிப்பது நல்லது. தவறான மொழி உள்ள விமர்சனங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை வெளியிடுவதை எங்கள் இணையதளம்/செயலி அனுமதிக்காது.

 

4. எழுத்தாளரையோ அல்லது வேறு எந்த தனி நபர்/தனிநபர்களின் குழுவையோ தனிப்பட்ட முறையில் தாக்கும் எதையும் பதிவிட வேண்டாம்.

 

5. தொடர்புடைய படைப்புகளுக்கு வரம்புடன் விமர்சனங்களை இடுங்கள் மற்றும் மரியாதைக்குரிய மொழியைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, அரசியல் அறிக்கைகளை வெளியிட, யாரையும் கேலி செய்ய/தீங்கு விளைவிக்க அல்லது பிறர் நடத்தையை சித்தரிக்க விமர்சனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

 

6. எங்களது Fake Engagement Guidelines மீறும் எதையும் இடுகையிடவோ அல்லது அதுபோன்ற நடத்தையில் ஈடுபடவோ வேண்டாம்.

 

சாட் வழிகாட்டுதல்கள் 

 

எங்களது சாட் அம்சத்தைப் பயன்படுத்தும் போது, ​​பயனர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்:

 

1. சாட் அம்சத்தின் மூலம் எங்கள் படைப்பு வழிகாட்டுதல்களை மீறும் எந்த செய்தியையும் அனுப்ப வேண்டாம்.

 

2. எழுத்தாளர் தொடர விரும்பாவிட்டாலும், பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளின் பதிப்புரிமையைப் பெறுவதற்காக எழுத்தாளர்களை தொந்தரவு செய்யவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.

 

3. பொது தளங்களில் மற்ற பயனர்களுடனான சாட் தகவல்களை வெளியிட வேண்டாம் மற்றும் அதன் ரகசியத்தன்மையை பராமரிக்கவும்.

 

4. பிற பயனர்களுடன் மரியாதையுடன் இருங்கள் மற்றும் உங்களுடன் சாட் செய்ய விரும்பாதவர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்.

 

5. இணையதளம்/செயலியில் யார் உங்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்தக் கிடைக்கக்கூடிய அம்சங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

6. உங்களைப் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் அது உங்கள் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தக்கூடும். PIN, OTP போன்ற தனிப்பட்ட வங்கித் தகவல்களைப் பகிர்வதும் இதில் அடங்கும்.

 

7. சாட் அம்சத்தின் மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன் அடிப்படையில் நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதைத் தவிர்க்கவும். மோசடியான பரிவர்த்தனைகளின் எந்தவொரு விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு. இதற்கு நிறுவனம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

 

8. சட்டப்படி தேவைப்படாவிட்டால், நாங்களாகவோ அல்லது தானியங்கு ரீதியிலோ எந்த அரட்டைகளையும் அல்லது செய்திகளையும் படிக்க மாட்டோம், எனவே எங்கள் வழிகாட்டுதல்கள்/கொள்கைகள் ஏதேனும் மீறப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் அல்லது நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகாரளிக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். சாட் அம்சத்தின் மூலம் அச்சுறுத்தல்கள், கோரப்படாத செய்திகள் அல்லது தேவையற்ற நடத்தைகளைப் பெறுதல் போன்ற சிக்கல்களைத் தீர்க்க, புகாரளிக்கப்பட்ட சாட் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை நாங்கள் கேட்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?