சப்ஸ்கிரிப்சன் இல்லாமல் நான் லாக் ஆன தொடர்களை வாசிக்க முடியுமா?

பிரதிலிபியில் உள்ள அனைத்து படைப்புகளையும் இலவசமாக அனைத்து வாசகர்களாலும் வாசிக்க முடியும். லாக் ஆகியிருக்கும் தொடர்களை இலவசமாக எப்படி வாசிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள் :

 

சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் :

 

சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின்கீழ் இருக்கும் படைப்புகளின் புதிய பாகங்கள் 5 நாட்களுக்கு லாக் ஆகியிருக்கும். இந்த படைப்புகளின் புதிய பாகங்களை வாசிக்கவேண்டுமெனில், 5 நாட்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் அந்த படைப்பின் எழுத்தாளரை ஃபாலோ செய்திருந்தால், குறிப்பிட்ட பாகம் இலவசமாக கிடைக்கும்போது உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும். 

 

ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்  :

 

ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் கீழ் இருக்கும் அனைத்து தொடர்களின் முதல் 10 பாகங்களும் இலவசமாக கிடைக்கும். நீங்கள் ப்ரீமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்வதன்மூலம் பிற அனைத்து லாக் செய்யப்பட்ட பாகங்களையும் உடனடியாக வாசிக்க முடியும். 

 

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் 10 பாகத்தையும் வாசித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்திற்கு பின் 11ஆம் பாகம் இலவசமாக வாசிக்க கிடைக்கும். அதேபோல் 11ஆம் பாகத்தை வாசித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்திற்கு பின் 12ஆம் பாகம் இலவசமாக வாசிக்க கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட பாகங்களை முழுமையாக வாசித்திருக்க வேண்டும். 

 

நாணயங்கள் உபயோகித்து :

 

நீங்கள் வாசிப்பு சவால் மூலமும், ரெஃபரல் மூலமும், பணம் செலுத்துவதன் மூலமும் பெறும் நாணயங்களை, ப்ரீமியம் தொடர்களின் பாகங்களை அன்லாக் செய்ய உபயோகிக்க முடியும். ஒரு தொடரில், ஒரு குறிப்பிட்ட லாக் ஆன பாகத்தை வாசிக்கவேண்டுமெனில், அதற்கு முந்தைய பாகம் அதற்கு முன்னரே அன்லாக் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். 

 

அதனை செய்ய :

 

  1. குறிப்பிட்ட ப்ரீமியம் தொடரை திறக்கவும்

  2. லாக் ஆன பாகத்தை க்ளிக் செய்யவும்

  3. பின் 'அன்லாக் செய்ய' பொத்தானை அழுத்தவும்

 

ஒவ்வொரு பாகம் அன்லாக் செய்யவும் 5 நாணயங்கள் செலுத்த வேண்டும். ஒருவேளை ஏதேனும் பாகத்தை அன்லாக் செய்ய நாணயங்களில் போதவில்லை எனில், எங்களது  ஸ்டோரில் பணம் செலுத்தி நாணயங்களை வாங்கமுடியும். அது உங்களுக்கு தடையில்லா வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும்.

இந்தப் பதிவு உதவியதா?