இணையதளம்/செயலியில் நிகழும் பதிப்புரிமை மீறலை நிறுவனம் எவ்வாறு கையாள்கிறது?
கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, இணையதளம்/செயலியில் ஏதேனும் பதிப்புரிமை மீறல் செயல்பாடுகள் இருந்தால், நிறுவனம் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி செயல்படும்:
கொள்கையின் சிறப்பம்சங்கள்
1. புகார்தாரரின் படைப்பு இணையதளம்/செயலியில் பதிப்பிக்கப்பட்ட படைப்பாக இருந்தாலும் அல்லது அது முதலில் வெளி-ஊடகத்தில் வெளியிடப்பட்டு பின் நிறுவனத்தின் இணையதளம்/செயலியில் நகலெடுக்கப்பட்டிருந்தாலும் ஓர் இடைநிலை நிறுவனமாக அதற்குப் பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு இணங்க எந்தவொரு பதிப்புரிமையாளராலும் ("புகார்தாரர்") அளிக்கப்படுகிற அனைத்து பதிப்புரிமை புகார்களையும் ("புகார்") தீர்க்க நிறுவனம் செயல்படும்.
2. நிறுவனம் புகாரை பதிவு செய்யும் வகையில், பதிப்புரிமையை உறுதிப்படுத்தப் போதுமான, செல்லுபடியாகும், தெளிவான சான்றுகள் மற்றும் பதிப்புரிமை மீறலைக் குறிப்பிடும் நிகழ்வு ஆகியவை புகாருடன் இருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், புகாரை பதிவு செய்ய மறுக்கவும் /அல்லது நிறுவனத்தின் சுய விருப்பத்தின் பேரில் கூடுதல் ஆவணங்களைக் கோர நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.
3. நிறுவனம்
அ. புகார்தாரரின் புகார் மூலமாகவோ அல்லது பிற பயனர்களின் புகார் மூலமாகவோ அல்லது இணையதளம்/செயலியில் நகலெடுக்கப்படும் படைப்புகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் மூலமாகவோ இணையதளம்/செயலியின் நிகழும் அனைத்து பதிப்புரிமை மீறல்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
ஆ. பதிப்பிக்கப்படும் படைப்புக்கும் புகார்தாரரின் படைப்புக்கும் இடையே கணிசமான ஒற்றுமை இருந்தால் (நிறுவனம் பல வழிகளில் கூர்ந்து நோக்கி அத்தகைய ஒற்றுமையை மதிப்பிடும்) இரண்டிற்கும் இடையேயான முதல் வெளியீட்டின் தேதியைக் கருத்தில் கொண்டு அதை அகற்றும்.
இ. குறைவான ஒற்றுமை இருக்கும் சந்தர்ப்பங்களில்,
i) பதிப்புரிமை மீறலின் உண்மைநிலை அல்லது சாத்தியக்கூறு குறித்து தீர்ப்பளிக்காது. கதை, கதைக்களம், கதாபாத்திரங்கள், போன்றவற்றின் ஒற்றுமைகளும் இதில் அடங்கும்.
ii) புகாரின் பேரில் பதிப்பிக்கப்பட்ட படைப்பை நீக்க முடிவு செய்யும்போது அது பதிப்புரிமையாளரால் புகாரளிக்கப்பட்டதா, வேறு எந்த பயனராலும் புகார் செய்யப்பட்டதா அல்லது நகலெடுத்தலைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் கருவி வழங்கிய ஒற்றுமையின் அளவு போன்ற பல்வேறு காரணிகளை நிறுவனம் கவனித்தில் எடுத்துக்கொள்ளும்.
iii) பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளுக்கு எதிராக புகார் செய்யப்பட்ட எழுத்தாளருக்கு புகாரின் தன்மை குறித்த அவரது நிலைப்பாட்டை அறிவிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்.
iv) பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க புகார்தாரரையும் சம்பந்தப்பட்ட எழுத்தாளரையும் ஊக்குவிக்கும்.
v) மேலும் புகார் புகார்தாரர் மூலமாக அளிக்கப்பட்டிருந்தால், புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்கு படைப்பை நிறுவனம் அகற்றி வைக்கும். புகார் பெறப்பட்ட எழுத்தாளர் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்தால், நிறுவனத்தின் இணையதளம் / செயலியிலிருந்து பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளை அகற்றுவதற்கான உத்தரவைப் பெற, புகார்தாரர் உரிய நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுவார். நீதிமன்றம் படைப்பை நீக்குமாறு உத்தரவு வழங்கினால் நிறுவனம் அதை ஏற்றுக் கொள்ளும். எவ்வாறாயினும், 21 நாள் காலத்திற்குப் பிறகு மற்றும் புகார்தாரரிடமிருந்து அத்தகைய சட்ட உத்தரவை பெறும் வரை, பிரச்சனைக்குரிய அப்படைப்பை மீண்டும் பதிப்பிக்க அல்லது அகற்றுவதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
4. ஒருவர் யாருக்கு எதிராகப் புகாரைத் தொடுத்துள்ளாரோ, அந்த எழுத்தாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்க, புகார்தாரர் தன்னிச்சையாக சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும். நிறுவனம் அவ்வாலோசனையை வழங்காது.